நாகை. டிச.18., நாகை வடக்கு மாவட்டம், கிளியனூரில் சிங்கப்பூர் தொழில் அதிபர் சலாவுதீன் அவர்கள் கட்டிய புதிய வீடு திறப்பு விழா நிகழ்ச்சியில் மஜக பொதுசெயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணை தலைவர் அப்துல் ரஹ்மான் Ex.MP அவர்களும், வக்பு வாரிய உறுப்பினர் டாக்டர் காஜா K.மஜிது அவர்களும் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் சுற்றுவட்டாரங்களை சார்ந்த ஜமாத்தார்களும்,பல்வேறு சமூக மக்களும் கலந்துக்கொண்டர்.
அழைப்பின் பெயரில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வருகை தந்து இருந்தனர். அவர்களை சிறப்பான விதத்தில் தனி சைவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு பரிமாறபட்டது. இது கவேரி டெல்டா மாவட்டங்களின் கூட்டு காலசாரத்தை பிரதி பலிக்கும் வகையில் இருந்தது.
அங்கு தீன் இசைத்தென்றல் தேரழந்தூர் தாஜிதீன் அவர்கள் பாடல்களை பாடி கொண்டிருந்த போது அவரிடம் பொதுசெயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள்
“மக்கத்து மலரே… மாணிக்க சுடரே… யா ரசூல்லாஹ்…” என்ற நாகூர் ஹனிபா அவர்களின் பாடலை பாட முடியுமா என்று கேட்டதும், அந்த பாடலை எழுதியவர் இதே கிளியனூரை சார்ந்த கவிஞர் அப்துல் சலாம் தான் என்று தெரியாதா? என பாடகர் தாஜ்தீன் கேட்டதும் அனைவரும் அச்சரியப்பட்டனர். பிறகு அந்த பாடலை அவர் பாட அனைத்து சமூக மக்களும் விரும்பி கேட்டு மகிழ்ந்தனர்.
பிறகு நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாஜக-விசிக மோதல் குறித்தும் பாஜக தலைவர்கள் உடைய காட்டமான பேச்சுகள் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த போது கருத்து மோதல்கள் கள மோதல்களாக மாறி விட கூடாது என்றும் பாஜக தலைவர்கள் நிதானத்தை கடைப்பிடித்து நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்றும் அமைதியை பரமரிக்க அனைத்து தலைவர்களும் உறுதி ஏற்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் N.M.மாலிக்,தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜஹான், மாவட்ட துணை செயலாளர்கள் சாகுல் ஹமீது, அபுசாலிஹ், ஜமில் மற்றும் ஒன்றிய,நகர நிர்வாகிகள் உடனியிருந்தனர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_நாகை_வடக்கு_மாவட்டம்
17.12.17