பட்டுக்கோட்டை.ஜன.06., மத்திய அரசு கொண்டுவரும் ஜனநாயக விரோத முத்தலாக் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி #ஜமாத்துல்_உலாமா சார்பில் நேற்று தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பட்டுக்கோட்டை வட்டார ஜமாத்துல் உலாமா சபை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் மாநில துணைச் செயலாளர் #திருமங்கலம் #J_ஷமீம்_அஹமது அவர்கள் கலந்து கொண்டு கண்டண உரை ஆற்றினார். இந்நிகழ்வுக்கு பட்டுக்கோட்டை வட்டார ஜமாத்துல் உலாமா தலைவர் #அய்யூப்கான்_ஹஜ்ரத் அவர்கள் தலைமை வகித்தார். இதில் மஜக மாநில துணைபொது செயலாலர் #மதுக்கூர் #K_ராவுத்தர்ஷா மாவட்ட பொறுப்பு குழு தலைவர். #பேராவூரணி. எஸ்.எம்.எ.சலாம் பொறுப்பு குழு உறுப்பினர்கள் அதிரை.பைசல், அதிரை சாகுல், பட்டுக்கோட்டை குத்து ப்தீன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பல்லாயிரகணக்கானோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தஞ்சை_தெற்கு_மாவட்டம். 05.01.2018
செய்திகள்
சிதம்பரத்தில் ஜமாத்துல் உலாமாவின் முத்தலாக் சட்ட எதிர்ப்பு கண்டன கூட்டம்…! மஜக இணைப் பொதுச்செயலாளர் பங்கேற்பு..!!
சிதம்பரம்.ஜன.06., மத்திய அரசு கொண்டுவரும் ஜனநாயக விரோத முத்தலாக் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி #ஜமாத்துல்_உலாமா சார்பில் நேற்று தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட ஜமாத்துல் உலாமா சார்பில் சிதம்பரம் MYM பைசல் மஹாலில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) இணைப் பொதுச்செயலாளர் #K_M_முஹம்மது_மைதின்_உலவி அவர்கள் கண்டன உரை ஆற்றினார். இந்நிகழ்வுக்கு கடலூர் மாவட்ட ஜமாத்துல் உலாமா தலைவர் மெளலவி. #A_சபியுல்லா_மன்பயி_ஹஜ்ரத் அவர்கள் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபையின் வழிகாட்டு தலைவர் A.E.M. அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் , கடலூர் மாவட்ட அரசு காஜி A. நூருல் அமீன் ஹஜ்ரத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் K.A.M. அபூபக்கர்MLA உள்ளிட்ட தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், மார்க்க அறிஞர்கள் உரையாற்றினர். இதில் பல்லாயிரகணக்கான மக்கள் திரண்டு மத்திய அரசின் இந்த சட்ட மசோதாவிற்கு எதிராக திரண்டு நின்றது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_கடலூர்_தெற்கு_மாவட்டம் 05.01.2018
முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக நெல்லையில் கண்டன பொதுக்கூட்டம்..! மஜக மாநில துணை செயலாளர் பங்கேற்பு…!!
நெல்லை. ஜன.06., மத்திய மதவாத அரசை கண்டித்து நெல்லை ஜவகர் திடலில் ஜமாத்துல் உலாமா சபை சார்பாக அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களை கூட்டி முத்தலாக் தடை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம் நேற்று 05.01.17 மாலை நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக மாநில துணை செயலாளர் புளியங்குடி செய்யது அலி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். குறிப்பாக பாசிசத்திற்கு எதிராக பிற்படுத்தபட்டோரும், ஒடுக்கபட்டோரும், நாத்திகர்களும், சேர்ந்து வேரறுப்போம் என்றும், முத்தலாக் தடை சட்டம் இந்திய இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்றார். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_நெல்லை_மாவட்டம்
மயிலாடுதுறையில் முத்தலாக் தடை சட்ட எதிர்ப்பு கண்டன பொதுக்கூட்டம்…! மஜக சார்பில் J.S.ரிஃபாயி ரஷாதி பங்கேற்பு..!!
நாகை. ஜன.06., நாகை வடக்கு மாவட்டம், மயிலாடுதுறையில் நேற்று 05.01.2018 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் சின்னக்கடை வீதியில் நாகை மாவட்ட #ஜமாத்துல்_உலமா சார்பாக பெண்கள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் ஷரீஅத் சட்டத்தில் கை வைக்கும் மத்திய அரசின் பாசிச போக்கை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இக்கண்டன பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) தலைமை நிர்வாககுழு உறுப்பினர் மெளலவி #JS_ரிபாய்_ரஷாதி அவர்கள் பங்கேற்று கண்டன பேருரை நிகழ்த்தினார். இதில் பல்லாயிரகணக்கோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் மஜக மாநில துணை செயலாளர் ஷேக் அப்துல்லா, மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் மாலிக், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சகத்துல்லாஹ், ஆக்கூர் ஷாஜஹான், மாவட்ட துணை செயலாளர்கள் அபுசாலிஹ், சாகுல் ஹமீது, ஜமீல், மிஸ்பாஹூதீன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஜெஹபர் அலி மற்றும் ஒன்றிய செயலாளர்கள்,நகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_நாகை_வடக்கு_மாவட்டம்
திண்டுக்கல் திணறியது…!
திண்டுக்கல். ஜன.05., மத்திய அரசு கொண்டுவரும் ஜனநாயக விரோத முத்தலாக் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி #ஜமாத்துல்_உலாமா சார்பில் இன்று தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் கண்டன பேருரை ஆற்றினார். இந்நிகழ்வுக்கு திண்டுக்கல் மாவட்ட ஜமாத்துல் உலாமா தலைவர் மெளலவி. #PM. முகம்மது_அலி_அன்வாரி_ஹஜ்ரத் அவர்கள் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் திமுக சார்பில் பெரியசாமி MLA, CPM சார்பில் பாலபாரதி Ex.MLA உள்ளிட்ட தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், மார்க்க அறிஞர்கள் உரையாற்றினர். மாலை5மணி முதல் இரவு 10 மணிவரை பல்லாயிரகணக்கான மக்கள் 3பக்கமும் திரண்டு நின்றது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திண்டுக்கல்_மாவட்டம். 05.01.2018