சிதம்பரத்தில் ஜமாத்துல் உலாமாவின் முத்தலாக் சட்ட எதிர்ப்பு கண்டன கூட்டம்…! மஜக இணைப் பொதுச்செயலாளர் பங்கேற்பு..!!

image

image

image

image

சிதம்பரம்.ஜன.06., மத்திய அரசு கொண்டுவரும் ஜனநாயக விரோத முத்தலாக் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி #ஜமாத்துல்_உலாமா சார்பில் நேற்று தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் கடலூர் மாவட்ட ஜமாத்துல் உலாமா சார்பில் சிதம்பரம் MYM பைசல் மஹாலில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) இணைப் பொதுச்செயலாளர் #K_M_முஹம்மது_மைதின்_உலவி அவர்கள் கண்டன உரை ஆற்றினார்.

இந்நிகழ்வுக்கு கடலூர் மாவட்ட ஜமாத்துல் உலாமா தலைவர் மெளலவி. #A_சபியுல்லா_மன்பயி_ஹஜ்ரத் அவர்கள் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபையின் வழிகாட்டு தலைவர் A.E.M. அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் , கடலூர் மாவட்ட அரசு காஜி A. நூருல் அமீன் ஹஜ்ரத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் K.A.M. அபூபக்கர்MLA உள்ளிட்ட தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், மார்க்க அறிஞர்கள் உரையாற்றினர்.

இதில் பல்லாயிரகணக்கான மக்கள் திரண்டு மத்திய அரசின் இந்த சட்ட மசோதாவிற்கு எதிராக திரண்டு நின்றது குறிப்பிடத்தக்கது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_கடலூர்_தெற்கு_மாவட்டம்
05.01.2018