வேதை.ஏப்.20., இன்று (20/04/2018) காஷ்மீரில் எட்டு வயது சிறுமி #ஆசிபா பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு நாகை தெற்கு மாவட்டம் ,வேதாரண்யம் வட்டம் தோப்புத்துறையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. மஜக நகர செயலாளர் ஷேக் அகமதுல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான குழந்தைகள் உட்பட முந்நூறுக்கும் மேற்பட்டோர் திரளாக கலந்துகொண்டனர். இதில் சகோதரி ஆசிபாவிற்கு நீதிவேண்டும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான மரண தண்டனை வழங்கவேண்டும் உள்ளிட்ட பதாகைகளை சிறுவர், சிறுமியர்கள் ஏந்திய வாறு கோஷமிட்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_வேதை_நகரம் 20.04.2018
செய்திகள்
ஆசிஃபாவுக்கு நீதி கேட்டு அந்தியூரில் மஜக ஆர்ப்பாட்டம்!
ஈரோடு.ஏப்.20., காஷ்மீரில் 'இந்து ஏக்தா மன்ஜ்' அமைப்பை சேர்ந்தவர்கள் #ஆசிபா என்ற 8 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்து இந்தியா முழுதும் போராட்டம் நடந்து வருகிறது. தமிழகம் தழுவிய அளவில் மனிதநேய ஜனநாயக கட்சி போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக #ஈரோடு மேற்கு மாவட்டம் அந்தியூரில் மஜக தலைமையில் #நீதிகேட்டு_போராட்டம் நடைபெற்றது. பல்வேறுபட்ட சமூகங்களை சார்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிபாவுக்கு நீதி கேட்டு மக்கள் முழக்கங்கள் எழுப்பினர். பத்து வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் ஆசிபாவுக்கு நீதி கேட்டு பதாகைகளை ஏந்திய படியே நின்றனர். ஆர்ப்பாட்டம் நடந்த சாலை வழியே சென்ற பொது மக்களும் ஆங்காங்கே நின்று ஆசிபா படம் பொறித்த பதாகைகளை பார்த்து பதைத்து போய் ஒரு நிமிடம் நின்ற பிறகே சென்றனர். வந்திருந்த பல்வேறு சமூக மக்களும் சோகம் சூழ்ந்த முகத்தோடு நின்றுக் கொண்டிருந்தனர். ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஷாநவாஸ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் சாகுல் அமீது முன்னிலை வகித்தார். மஜக மாநில துணைப் பொதுச்செயலாளர் செய்யது அஹ்மத் பாரூக்,மாநில துணைச்செயலாளர் பாபு ஷாஹின்ஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் கோவை பாரூக், நாம் தமிழர் கட்சியின் பிரதிநிதி
நீட் எதிர்ப்பு மாநாடு! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ பங்கேற்பு!
சென்னை.ஏப்.19., இயக்குனர் கௌதமன் அவர்களின் முன் முயற்சியில் #நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை காமராஜர் அரங்கில் மாநாடு நடைபெற்றது. இதில் ஐயா நல்லகண்ணு, ஐயா பழ.நெடுமாறன், வைகோ, கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ், மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ , தனியரசு எம்.எல்.ஏ, பெ.மணியரசன், திருமுருகன் காந்தி, தோழர் தியாகு, கொள்தூர் மணி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர். மஜக பொதுச்செயலாளர் பேசும் போது நீட் தேர்வை இந்தியா முழுக்க ரத்து செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாட்டிலிருந்து அதற்கான போராட்டம் நாடு முழுக்க பரவ வேண்டும் என்றும், பேசினார். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்_சென்னை 19.04.2018
சிறையில் சந்திப்பு…!
இன்று புழல் சிறையில் இரண்டாவது முறையாக #மஜக பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது உள்ளிட்ட 7 மஜக சகோதரர்களையும் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA சந்தித்தார். அவருடன் மாநில செயலாளர் தைமியா, மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ் ஆகியோரும் உடன் சென்றனர். வழக்கு நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்தும், மூவரும் எடுத்து கூறினர். அதற்கு அவர்கள் தலைமை எடுத்துவரும் சட்ட நடவடிக்கைகளை புரிந்து கொள்வதாகவும், யாரோ சிலர் சொல்லும் அவதூறுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றும், தாங்கள் இவ்விசயத்தில் தெளிவாகவும், உற்சாகமாகவும் இருப்பதாகவும் கூறினர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்_சென்னை
நாகரீக அரசியலுக்கு உகந்ததல்ல…
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) திமுக தலைவர் கலைஞர் அவர்கள் குறித்து மறைமுகமாக ட்விட்டரில் பாஜகவின் தேசிய செயலாளர் H. ராஜா வெளியிட்ட கருத்து அநாகரீகத்தின் உச்சமாகும். கலைஞர் உடல் நலமின்றி, அரசியலிருந்து ஏறத்தாழ ஒதுங்கியிருக்கும் நிலையில் அவர் மீது தொடுத்திருக்கும் தனி நபர் தாக்குதல்கள் வெறுப்பு அரசியலின் வெளிப்பாடாகும். அக்கருத்துகளை மனிதநேய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது. நாகரீக வளர்ச்சியின் வழியாகவே, அரசியல் முதிர்ச்சியும், பண்பாடும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். தனிநபர் விமர்சனங்களும், தனி நபரை வீழ்த்த முன்னெடுக்கப்படும் தரங்கெட்ட முயற்சிகளும் பொது வாழ்வுக்கு எந்த விதத்திலும் சிறப்பு சேர்க்காது. கொள்கை ரீதியான விமர்சனங்கள் மட்டுமே, ஒருவரின் அரசியல் தரத்தை மதிப்பீடு செய்யும் என்பதை அனைவரும் உணர வேண்டும். இவண், #மு_தமிமுன்_அன்சாரி_MLA #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 19.04.18