கோவை.மே.03.மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாவட்ட தலைமையகத்திற்கு மாநில நிர்வாகிகள் வருகை தந்தனர். இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் J.S.ரிபாயி ரஷாதி, இணை பொதுச்செயலாளர் மைதீன்உலவி, துணை பொதுச்செயலாளர் மன்னைசெல்லச்சாமி, ஆகியோர் மாவட்ட அலுவலகத்தை பார்வையிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர். இச்சந்திப்பில் மாநில மீனவர் அணி துணை செயலாளர் MH.ஜாபர்அலி, மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் PM.முகம்மதுரபீக், கிணத்துகடவு பகுதி செயலாளர் ஹாருண்ரஷீது, பொருளாளர் காதர், துணை செயலாளர் அபு, மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 03.05.18
செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் கொழுவனூரில் மதுப்பானக்கடையை அகற்ற கோரி சாலை மறியல்..! மஜக பங்கேற்பு..!!
மீமிசல். மே.03., புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் மீமிசல் அருகே உள்ள வேள்வரை பஞ்சாயத்துக்குட்பட்ட கொழுவனூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய டாஸ்மாக் கடையை அகற்றகோரி கிராம மக்கள் சார்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதில் #CPIM மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் சலோமி, பமக கிழக்கு மாவட்ட செயலாளர் சக்தி செல்வம், #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) மாவட்ட செயலாளர் முபாரக் அலி, #மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஹாரிஸ், மஜக மாவட்ட துணை செயலாளர் செய்யது அபுதாஹிர், #நாம்_தமிழர்_கட்சி தொகுதி பொறுப்பாளர் டேவிட், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கோவிந்தராசு ஆகியோர் முன்னிலையில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.DSP காமராசு தலைமையில், ஆய்வாளர் பாலாஜி உட்பட 50க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர், வட்டாச்சியர் கிருஷ்ணவேணி, கலால் துணை ஆணையர் பரணி ஆகியோர் டாஸ்மார்க் கடையை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு இன்னும் ஓரிரு தினங்களில் நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாத பட்சத்தில் #கலெக்டர்_ஆபிஸ்_முற்றுகையிட்டு ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டுகள் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெறும் என்று கூறி
மஜக திண்டுக்கல் மாவட்டம் சார்பில் மே_01 நிகழ்வு..!
திண்டுக்கல்.மே.03., கடந்த 01.05.2018 (மே-01) காலை 10மணியலவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக தொழிலாளர்கள் தினத்தை கொண்டாடும் வகையில் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி காட்டாஸ்பத்திரி பகுதியில் மாவட்ட பொருளாளர் M.அனஸ் முஸ்தபா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சேக் பரித், நகர துணை செயலாளர் அஜார் ,ரவுண்ரோடு சாகுல் பாய் , ஷாஜகான் AC ,ஆட்டோ ஹக்கிம், சையது ஜாபர்,மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திண்டுக்கல்_மாவட்டம் 01.05.2018
தமிழகத்தில் சாகர் மாலா திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்..! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பேட்டி..!!
அறந்தாங்கி.மே.02., மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் கோட்டைப்பட்டிணம் பகுதியில் பல்வேறு இயக்கங்கள் மற்றும் கட்சியில் இருந்து விலகி மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு பதிலளித்த மஜக பொதுச்செயலாளர் தமிழகத்தில் மீனவர்கள் மற்றும் கடலோர பகுதிகளில் வாழும் மக்களை முழுதுமாக அழித்துவிட்டு அதன் மூலம் கொண்டுவரப்படும் #சாகர்_மாலா திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும், காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒத்த கருத்துடன் செயல்பட வேண்டும் என்றும், #காவிரி_மேலாண்மை_வாரியம் தொடர்பான தீர்ப்பில் உள்ள #ஸ்கீம் என்ற வார்த்தைக்கு இன்னும் அர்த்தங்கள் கண்டுபிடிக்கபடவில்லை என்றும் பதிலளித்தார்கள். இதில் மாநில துணைபொதுச்செயலாளர் மண்டலம் ஜெய்னுலாப்தீன், மாவட்ட செயலாளர் இ.முபாரக் அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், மாவட்ட துணைச்செயலாளர் செய்யது அபுதாகிர் மற்றும் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி. #MJK_IT_WING #மஜக_புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம். 02.05.2018
மஜக மத்தியசென்னை மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் திருமணம்..! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA, கருணாஸ் MLA பங்கேற்பு..!
பரமக்குடி. மே.02., இன்று இராமநாதபுரம் மாவட்டம் கொழுந்துரையில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் R.பைசல் ரஹ்மான் BA.BL திருமணம் நடைபெற்றது. இதில் வாழ்த்துரை வழங்க சிறப்பு அழைப்பார்களாக #மஜக பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான #மு_தமிமுன்_அன்சாரி_MLA மற்றும் #முக்குலத்தோர்_புலிப்படை தலைவரும் திருவாடானை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான #எஸ்_கருணாஸ்_MLA ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக கொழுந்துரை பகுதியில் ஜமாத்தார்கள் சிறப்பாக வரவேற்ப்பளித்தனர், அதன் பின் அப்பகுதியில் மஜக கொடியினை பொதுச்செயலாளர் ஏற்றிவைத்தார்கள். இதில் மஜக துணைப் பொதுச்செயலாளர் மண்டலம் ஜெய்னுலாப்தீன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் பரமக்குடி இலியாஸ், சிவகங்கை மாவட்ட துணை செயலாளர் ரஹ்மான், கொழுந்துரை ஜமாத்தார்கள், பரமக்குடி நகர நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_இராமநாதபுரம்_மேற்கு_மாவட்டம் 02.05.18