தமிழகத்தில் சாகர் மாலா திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்..! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பேட்டி..!!

அறந்தாங்கி.மே.02., மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் கோட்டைப்பட்டிணம் பகுதியில் பல்வேறு இயக்கங்கள் மற்றும் கட்சியில் இருந்து விலகி மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு பதிலளித்த மஜக பொதுச்செயலாளர் தமிழகத்தில் மீனவர்கள் மற்றும் கடலோர பகுதிகளில் வாழும் மக்களை முழுதுமாக அழித்துவிட்டு அதன் மூலம் கொண்டுவரப்படும் #சாகர்_மாலா திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும், காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒத்த கருத்துடன் செயல்பட வேண்டும் என்றும், #காவிரி_மேலாண்மை_வாரியம் தொடர்பான தீர்ப்பில் உள்ள #ஸ்கீம் என்ற வார்த்தைக்கு இன்னும் அர்த்தங்கள் கண்டுபிடிக்கபடவில்லை என்றும் பதிலளித்தார்கள்.

இதில் மாநில துணைபொதுச்செயலாளர்
மண்டலம் ஜெய்னுலாப்தீன், மாவட்ட செயலாளர் இ.முபாரக் அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், மாவட்ட துணைச்செயலாளர் செய்யது அபுதாகிர் மற்றும் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி.
#MJK_IT_WING
#மஜக_புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்.

02.05.2018

Top