குடியாத்தம் மஜக சார்பில் குடிநீர் விநியோகம்.!

பாலாற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக வேலூர் மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டக் குழாய்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

இதனால் வேலூர் மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் குடியாத்தம் நகர செயலாளர் S.அனீஸ் அவர்கள் தலைமையில் 8 வார்டு MBS நகர் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது

இதில் AITI மாநில து.செயலாளர் ஆலியார் அதாவுல்லா, மஜக மருத்துவ சேவை அணி செயலாளர் சாதிக், ஆகியோர் உடனிருந்து குடிநீர் விநியோகம் செய்தனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#வேலூர்_மாவட்டம்
03.12.2021