சென்னை. மே.29., ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை கிராமத்தை சேர்ந்த மக்கள் வணிக நிமித்தமாக சென்னையில் குடியேறி, பல தொழில்களில் ஈடுபட்டு வலம் வருகின்றனர். அவர்கள் நம்புதாளை முஸ்லிம் நல சங்கம் என்ற பெயரில் 16. ஆண்டுகளாக செயல்பட்டு, பல்வேறு அறப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் நோன்பு திறப்பு இஃப்தார் நிகழ்ச்சியில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களும், மாநிலச் செயலாளர் #A_சாதிக்_பாட்ஷா அவர்களும் பங்கேற்றனர். 500 குடும்பங்களை சேர்ந்த 1300 பேர் பங்கேற்ற இந்நிகழ்வு, எழும்பூர் இம்பீரியல் - சிராஜ் மஹாலில் நடைபெற்றது. +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், சர்வதேச அளவில் பதக்கங்களை வென்றவர்களுக்கும் சங்கத்தின் சார்பில் தமிமுன் அன்சாரி MLA அவர்களும், மாநில செயலாளர் சாதிக் பாஷா அவர்களும் பரிசுகளை வழங்கினர். இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் #J_ஷமீம், #மாணவர்_இந்தியா மாநில செயலாளர் அசாருதீன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் பிஸ்மி மற்றும் மாணவர் இந்தியா நிர்வாகிகளும் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_மத்திய_சென்னை_மாவட்டம். 28.05.2018
செய்திகள்
மஜக தலைமையகத்தில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி..! காவிரி போராட்டத்தில் சிறை சென்ற தோழர்கள் வருகை..!!
சென்னை.29., மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகத்தில் ரம்ஜான் மாத முழுவதும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழக்கம் போல் மஜக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தினமும் கலந்து கொண்டு நோன்பை திறப்பார்கள். காவிரி மேலான்மை வாாியம் அமைக்ககோாி பல்லாவரத்தில் மத்திய மாநில அரசை கண்டித்து சென்ற மாதம் அறவழியில் போராட்டம் நடத்தி 14 நாள் சிறைவாசம் கண்டு வந்த மஜக மாநில பொருளாளா் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது உட்பட மஜக 7 சகோதரா்கள் மற்றும் நாம் தமிழா் கட்சியை சோ்ந்த 11 தோழர்களும் இன்று தலைமையகத்தில் நோன்பு திறப்பு நிகழச்சி மற்றும் சிறப்பு கறிவிருந்து ஏற்பாடு செய்யப்பட்டு அழைப்பு விடபட்டிருந்தது. அதன் அடிப்படையில் அனைத்து சகோதரா்களும் மஜக தலைமையகம் வருகை புாிந்தனா். அனைவரையும் உபசாித்து நாம் தமிழா் கட்சியினருடன், ஹாரூன் ரஷீது அவா்கள் தூத்துகுடியில் நடந்த துப்பாக்கி சூட்டையும் இன்றைய இயல்பு நிலையைகளையும் விாிவாக எடுத்துரைத்தாா்கள். தங்களை அழைத்து விருந்தளிததற்கு மகிழ்ச்சியும், நன்றியையும் தொிவித்து விடை பெற்றாா்கள் இதில் மஜக மாவட்ட , நகர மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம் 27.05.2018
மஜக வேலூர் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..!
வேலூர்.மே.29., #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் வேலூர் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி கடந்த (27.05.2018) அன்று மாவட்ட செயலாளர் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட செயலாளர் #Mஜஹீருஸ் ஜமா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர்கள் TR.முன்னா (எ) நஸிர் மற்றும் I.S. முனவ்வர் ஷரீப் முன்னிலை வகித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வேலூர் மேற்கு மாவட்ட மருத்துவ சேவை அணி பொருளாளராக S.Y.ஆரிப் அவர்களை ஏக மனதாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இக்கூட்டத்தில் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் C.அன்வர் பாஷா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அக்மல், MJTS மாவட்ட செயலாளர் TD.அப்ரோஸ் அஹ்மத், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.M.நிஜாமுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_வேலூர்_மேற்கு _மாவட்டம். 27.05.2018
தூத்துக்குடியில் இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் இரங்கல்! நாகை MLA நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியில் தூத்துக்குடி தியாகிகளுக்காக பிராத்தனை..!!
நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் சார்பில், #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள், இன்று நாகப்பட்டினம் EGS பிள்ளை பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள பிரம்மாண்ட அரங்கத்தில் இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சியை நடத்தினார். "இதயங்களால் ஒன்றிணைவோம்" என்ற தலைப்பில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் பல்வேறு மதத்தினரும், பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்களும், கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் பங்குபெற்று "நாகை தொகுதி" யின் பண்பாட்டை வெளிக்காட்டினர். மாலை 4 மணியிலிருந்தே தொகுதியை சேர்ந்த பல்வேறு சமூக இளைஞர்கள் தன்னார்வத்துடன் வருகை தந்து, நாற்காலிகளை ஒழுங்குபடுத்தி விருந்தோம்பலுக்கான பணிகளை முன்னின்று செய்தனர். அரங்கத்தின் நுழைவாயிலில் "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி உயிர் திறந்த தியாகிகளின் குடும்பத்தினர் ஆறுதல் பெற பிராத்தியுங்கள் "என்ற பதாகை அனைவரின் கவனத்தையும் பிரதானமாக ஈர்த்தது. அதுபோல் வளாகத்தில் நாகை MLA அலுவலகத்தின் சார்பில் "நகர்வு அலுவலகம்" அமைக்கப்பட்டு, அதில் அலுவலக ஊழியர் சம்பத் தலைமையில் தொகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அதுபோல் ஏராளமானோர் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான பரிந்துரை கடிதங்களை பெற்று சென்றார். பலர் கொடுத்த மனுக்கல் மாவட்ட ஆட்சியரிடமும், அமைச்சரிடமும் உடனுக்குடன் கையளிக்கப்பட்டது. மாலை 6 மணிக்கெல்லாம் மக்கள் வரத் தொடங்கினர். பெண்களும் வந்ததால், அவர்களுக்கு தனிப்பிரிவு
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இஃப்தார் நிகழ்ச்சி..! மஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்பு..!!
விழுப்புரம்.27., மனிதநேய ஜனநாயக கட்சி விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று கொடி ஏற்பு நிகழ்ச்சியை அடுத்து மாலை ரம்ஜான் நோன்பு துறப்பு (இஃப்தார்) நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாருன்_ரசீது M.com மற்றும் மாநில நிர்வாக குழு உறுப்பினர் #JS_ரிஃபாயி_ரஷாதி ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் மஜக விழுப்புரம் மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் N.அன்வர்பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது யூசூப், தலைமை கழக பேச்சாளர் அப்துல் ரஹ்மான், திருவண்ணாமலை மாவட்ட பொருளாளர் SL.செய்யது முஸ்தபா, மாவட்ட துணை செயலாளர் இம்தியாஸ் உசைன் மற்றும் விழுப்புரம் மாவட்ட துணை செயலாளர்கள் Jsm.சௌகத், குத்தூஸ், திருக்கோவிலூர் நகர செயலாளர் அக்பர், பொருளாளர் சாதிக், திருக்கோவிலூர் ஒன்றிய செயலாளர் ஜாவித், திருக்கோவிலூர் நகர, பகுதி, ஒன்றிய நிர்வாகிகள் விழுப்புரம் நகர செயலாளர், A.முஹம்மது அலி ஜின்னா, பொருளாளர் அலி முஹம்மது ஜபிர், விழுப்புரம் நகர நிர்வாகிகள், திருவண்ணாமலை நகர செயலாளர் அக்பர், நகர இளைஞர் அணி செயலாளர் தர்விஸ், கடம்பை ஒன்றிய செயலாளர் ரஹமத்துல்லாஹ் மற்றும் நகர,