You are here

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இஃப்தார் நிகழ்ச்சி..! மஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்பு..!!

விழுப்புரம்.27., மனிதநேய ஜனநாயக கட்சி விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று கொடி ஏற்பு நிகழ்ச்சியை அடுத்து மாலை ரம்ஜான் நோன்பு துறப்பு (இஃப்தார்) நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாருன்_ரசீது M.com மற்றும் மாநில நிர்வாக குழு உறுப்பினர் #JS_ரிஃபாயி_ரஷாதி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் மஜக விழுப்புரம் மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் N.அன்வர்பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது யூசூப், தலைமை கழக பேச்சாளர் அப்துல் ரஹ்மான், திருவண்ணாமலை மாவட்ட பொருளாளர் SL.செய்யது முஸ்தபா, மாவட்ட துணை செயலாளர் இம்தியாஸ் உசைன் மற்றும் விழுப்புரம் மாவட்ட துணை செயலாளர்கள் Jsm.சௌகத், குத்தூஸ், திருக்கோவிலூர் நகர செயலாளர் அக்பர், பொருளாளர் சாதிக், திருக்கோவிலூர் ஒன்றிய செயலாளர் ஜாவித், திருக்கோவிலூர் நகர, பகுதி, ஒன்றிய நிர்வாகிகள் விழுப்புரம் நகர செயலாளர், A.முஹம்மது அலி ஜின்னா, பொருளாளர் அலி முஹம்மது ஜபிர், விழுப்புரம் நகர நிர்வாகிகள், திருவண்ணாமலை நகர செயலாளர் அக்பர், நகர இளைஞர் அணி செயலாளர் தர்விஸ், கடம்பை ஒன்றிய செயலாளர் ரஹமத்துல்லாஹ் மற்றும் நகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் களந்துகொண்டு சிறப்பித்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_விழுப்புரம்_மாவட்டம்
26.05.2018

Top