அரியலூர். மே.27., வன்னியர் சங்கத் தலைவர் #காடுவெட்டி_குரு அவர்கள் மரணம் அடைந்ததையொட்டி அவரது சொந்த ஊரான காடு வெட்டிக்கு #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் நேற்று இரவு நேரில் சென்று அவரது உடலை பார்த்து மரியாதை செய்தார்.அவரது குடும்பத்தினரையும், வன்னியர் சங்கத் தலைவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். #பா_ம_க தலைவர் #GK_மணி அவர்களை அழைப்பேசியில் தொடர்புக் கொண்டு மஜகவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்தினார்.பிறகு பத்திரிக்கையாளரை சந்தித்த அவர், அப்பாசங்கர் கமிஷனை தமிழகத்தின் மூலை முடுக்கேளெல்லாம் முழங்கியவர் காடுவெட்டியார் என்றும் வன்னிய மக்களின் முன்னேற்த்திற்காக உழைத்தது மட்டும்மின்றி, முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டுக்காகவும் குரல் கொடுத்தார். சட்டமன்றத்தில் சமூக நீதிக்காக நிறைய பேசினார் என்று புகழாரம் சூட்டினார்.அவரது பேட்டியை அருகில் நின்று கேட்ட வன்னிய சமூக மக்கள் கண்ணீர் மல்க உணர்ச்சி வசபட்டனர். விடைப்பெறும் போது வன்னிய மக்கள் கை கொடுத்து வருகைக்கு நன்றி கூறினர்.பொதுச்செயலாளருடன் மாநிலச் செயலாளர்கள் நாச்சிக்குளம் தாஜுதீன், ராசுதீன், அரியலூர் மாவட்ட செயலாளர் அக்பர், கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மஜகவினர் கலந்துக் கொண்டனர்.தகவல்;#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,#MJK_IT_WING,#மஜக_அரியலூர்_மாவட்டம்.26.05.2018