You are here

மஜக தலைமையகத்தில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி..! காவிரி போராட்டத்தில் சிறை சென்ற தோழர்கள் வருகை..!!

சென்னை.29., மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகத்தில் ரம்ஜான் மாத முழுவதும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழக்கம் போல் மஜக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தினமும் கலந்து கொண்டு நோன்பை திறப்பார்கள்.

காவிரி மேலான்மை வாாியம் அமைக்ககோாி பல்லாவரத்தில் மத்திய மாநில அரசை கண்டித்து சென்ற மாதம் அறவழியில் போராட்டம் நடத்தி 14 நாள் சிறைவாசம் கண்டு வந்த மஜக மாநில பொருளாளா் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது உட்பட மஜக 7 சகோதரா்கள் மற்றும் நாம் தமிழா் கட்சியை சோ்ந்த 11 தோழர்களும் இன்று தலைமையகத்தில் நோன்பு திறப்பு நிகழச்சி மற்றும் சிறப்பு கறிவிருந்து ஏற்பாடு செய்யப்பட்டு அழைப்பு விடபட்டிருந்தது.

அதன் அடிப்படையில் அனைத்து சகோதரா்களும் மஜக தலைமையகம் வருகை புாிந்தனா். அனைவரையும் உபசாித்து நாம் தமிழா் கட்சியினருடன், ஹாரூன் ரஷீது அவா்கள் தூத்துகுடியில் நடந்த துப்பாக்கி சூட்டையும் இன்றைய இயல்பு நிலையைகளையும் விாிவாக எடுத்துரைத்தாா்கள்.

தங்களை அழைத்து விருந்தளிததற்கு மகிழ்ச்சியும், நன்றியையும் தொிவித்து விடை பெற்றாா்கள்

இதில் மஜக மாவட்ட , நகர மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்
27.05.2018

Top