ஐக்கிய அரபு அமீரகம்-அல் அய்ன் Indian Social Centre சார்பில், புனித ரமலானை முன்னிட்டு, திருக்குர்ஆன் ஓதும் இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றியுள்ளார். அவரது உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின் வருமாறு... ISC அமைப்பில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள் என எல்லோரும் இந்தியர்கள் என்ற சகோதரத்துவ உணர்வோடு இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்துவதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதுதான் உலகத்திற்கு நாம் கூறும் செய்தியாகும். இத்தகைய ஒற்றுமைத்தான் திருக்குர்ஆன் போதிக்கிறது, அன்பை, சகோதரத்துவத்தை, சகிப்புத் தன்மையை, வணிகத்தை, அரசியலை, ஒடுக்கப்பட்டோரின் விடுதலையை, சமத்துவத்தை, வாழ்வியலைதான் குர்-ஆன் போதிக்கிறது. அதனால்தான் இதை உலகப் பொதுமறை என்கிறோம். இது அனைவருக்குமான வழிகாட்டும் வேத நூலாகும். இதை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். திருக்குர் ஆனின் சிறப்பு என்னவென்றால் அது யாராலும் எழுதப்பட்டதல்ல- வானவர் ஜிப்ரயில் (அலை) மூலம் ஒலி வடிவில் அது நபிகளாருக்கு அருளப்பட்டது. குரல் வடிவில் வழங்கப்பட்ட வேத வரிகளை பின்னர் கலீபாக்கள் அதை தொகுத்து ஓரே குர் ஆன் என உலகத்திற்கு அளித்தார்கள். திருக்குர்ஆன் மிகச் சிறந்த இலக்கிய நூலும் கூட. இதை மிகச்
செய்திகள்
துபையில் நாகூரார் இஃப்தார் நிகழ்ச்சி..! நாகூர்சங்கம்.Com இணையத்தை தொடங்கி வைத்தார்…!! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA!
துபாய்.ஜூன்.01., நேற்று 31.05.18 ஐக்கிய அரபு அமீரகம் துபையில் அமீரக நாகூர் சங்கம் சார்பில், பிரபல சமூக ஆர்வலர் ஷேக்தாவுது மரைக்காயர் தலைமையில் நோன்பு துறப்பு நிகழ்ச்சி (இஃப்தார்) நடைப்பெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளரரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது #Nagoor_Sangam.com என்ற இணையத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அமீரக நாகூர் சங்கம் 'ANAS' என்று சுருக்கமாக கூறப்படுகிறது. 'அனஸ்' என்றால் அன்பு என்று அர்த்தம். நாகூர் மக்களின் மீது கொண்ட அன்பு காரணமாக 'அனஸ்' உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரபல நபித்தோழரின் பெயரும் கூட 'அனஸ் ரலி' என்பதை நினைக்கும் போது, மிக சரியான ஒரு வார்த்தை நாகூர் மக்களை இணைக்கிறது. அனைத்துக் சமூக மக்களும் சேவையாற்ற இச்சங்கம் தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வெளிநாடுகளில் வாழும் நாகூர் மக்களை இந்த இணையதளம் இணைக்க விருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த இணைய தளத்தை நல்ல வகையில் பயன்படுத்துங்கள். சமூக இணையதளங்களில் பொறுப்புணர்வோடு கருத்துக்களை பகிரவேண்டும். விரைவில் நாகூரில் ஒரு ஐக்கிய ஜமாத்தை நீங்கள் உருவாக்க வேண்டும் என்றார். தொகுதி மக்களுக்கு தான் செய்து வரும் பணிகள் குறித்தும் பட்டியலிட்டார். இந்நிகழ்வில் அமீரக
இதயங்களால் ஒன்றினைவோம்..! மதுரையில் மத நல்லிணக்க விழாவாக மாறிய மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சி..!!
மதுரை.மே.31. மதுரை வடக்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) சார்பில் நோன்பு துறப்பு எனும் #இஃப்தார்_நிகழ்ச்சி ஒத்தக்கடையில் உள்ள பிரபல தனியார் உணவு விடுதியில் சிறப்பாக நடைபெற்றது. இந்த சிறப்புவாய்ந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைச்செயலாளர் சிக்கந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் சசிக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். ஒத்தக்கடை ஜமாத்தார்களும் நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த #மஜக மாநில #துணைப்பொது_செயலாளர்கள் மண்டலம் ஜெய்னுலாப்தீன் மற்றும் மன்னை.செல்லச்சாமி ஆகியோர் சமூக நல்லிணக்கம் குறித்து கருத்துரை வழங்கினார்., மாநில துணைச்செயலாளர் முகம்மது சைபுல்லாஹ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட பொருளாளர் சுலைமான் நன்றியுரையாற்றினார். மதுரையில் மக்கள் பணியாற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், சமூக சமுதாய அமைப்புகள் மற்றும் ஆன்மீக பெரியவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து நல்லிணக்க திருவிழாவாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள். இதில் மாவட்ட மருத்துவ அணிச்செயலாளர் பிரித்திவி ராஜ், ராஜேஸ் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் ஒத்தக்கடை பாரூக் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் உலமா பெருமக்கள், ஜமாத்தார்கள், பொதுமக்கள் என பெரும்திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_மதுரை_வடக்கு_மாவட்டம். 30.05.2018
மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA மதுரை வருகை..!
மதுரை.மே.30., மதுரை தெற்கு மாவட்ட பொருளாளர் கமால் அவர்கள் கடந்த வாரம் மரணமடைந்ததையொட்டி அவரது இல்லத்திற்கு ஆறுதல் கூறுவதற்காக இன்று மாலை மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அம்சரி MLA அவர்கள் வருகை தந்தார்கள். அவரது இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறி, தங்கள் குடும்பத்திற்கு மஜக எப்போதும் அரணாக இருக்குமென்று நம்பிக்கையூட்டினார். மகபூப்பாலையத்திற்கு வருகை தந்ததையொட்டி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், இளைஞர்களும் பொதுச்செயலாளரை சந்தித்து அலவளவினர். இதில் மாநில துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஹாரிஸ், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மெய்தீன், வடக்கு மாவட்ட செயலாளர் ஒத்தக்கடை பாரூக், திருச்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா மற்றும் இரண்டு மாவட்ட நிர்வாகிகள், மனிதநேய சொந்தங்கள் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_மதுரை_தெற்கு_மாவட்டம். 30.05.2018
சனாயா மண்டலத்தில் சாரை சாரையாக இளைஞர்கள் மஜகவை நோக்கி…!
கத்தார்.மே. 30., இன்று மாலை கத்தார் சனையா மண்டலத்திற்கு உட்பட்ட #கிராண்ட்_மால் பகுதியில் மண்டல செயலாளர் சகோதரர் நூர் முஹம்மத் தலைமையில் புதிதாக பல இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்தனர். இந்நிகழ்வின் போது, அனைவருக்கும் எதிர்வரும் ஜூன்-01 வெள்ளி மாலை நடைபெறவுள்ள #சமூக_நல்லிணக்க_இஃப்தார் நிகழ்ச்சிக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. தகவல்: #MKP_IT_WING #MKP_சனையா_மண்டலம் #மனிதநேய_கலாச்சார_பேரவை_கத்தார்.