கட்சி வளர்ச்சிக்கு கட்டுக்கோப்பு முக்கியமானது, மஜக தலைமை நிர்வாகக் குழுவில் தீர்மானம்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் நேற்று இரவு (15.02.2023) காணொளி வழியே நடைப்பெற்றது.

பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா. நாசர், துணைப் பொதுச் செயலாளர்கள் செய்யது முகம்மது பாரூக், மதுக்கூர் ராவுத்தர்ஷா, மன்னை செல்லச்சாமி, நாச்சிக்குளம். தாஜுதீன், மாநிலச் செயலாளர்கள் நாகை. முபாரக், பல்லாவரம் ஷஃபி, கோவை ஜாபர் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின் வருமாறு…

1. தலைமை நிர்வாகக்குழுவில் காலியாக உள்ள பொறுப்புகள் கீழ்கண்டவாறு பொதுச் செயலாளர் ஒப்புதலுடன் நிரப்பப்படுகிறது.

பொருளாளர்: மௌலா. நாசர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்: செய்யது முகம்மது பாரூக்

அவைத் தலைவர்: மன்னை செல்லச்சாமி

2. தலைமை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் கீழ்க்கண்ட 3 உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

(i) அறந்தாங்கி முபாரக்
(ii) நாகை. சதக்கத்துல்லாஹ்
(iii) ஒசூர் நெளஷாத்

3. மதவெறி சக்திகள் வலிமைப் பெற்றிருக்கும் இக்கால கட்டத்தில் சமூகத்தில் பிளவுகளையும், குழப்பங்களையும் உருவாக்குவது பெரும் குற்றம் என இக் கூட்டம் கருதுகிறது. அத்தகைய காரியங்களில் ஈடுபடுபவர்களை நோக்கி கவலையுடன் இச்செய்தியை சுட்டிக்காட்டுகிறது.

2. கடந்த 07.02.2023 அன்று தஞ்சாவூரில் நடைப்பெற்ற அவசர செயற்குழுவை தொடர்ந்து, சிறப்பு நிர்வாகக் குழுவில் விவாதிக்கப்பட்டு, 37 மாவட்டங்களின் பரிந்துரையுடன், பொருளாளர், அவைத் தலைவர் ஆகியோர், அவர்கள் வகிக்கும் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

கட்சி By law பக்கம் எண் 31, விதி 37, உட்பிரிவு 2-ன் படி எடுக்கப்பட்ட இந்நடவடிக்கைப் படி, அவர்கள் கட்சியின் பெயரை பயன்படுத்தி நிகழ்ச்சி நடத்திட கூடாது என்பதும், மீறினால் சட்ட நடவடிக்கை எடுப்பது என்றும் இக் கூட்டம் முடிவு செய்கிறது.

3. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் பெயரிலோ, அல்லது வேறு பெயரிலோ நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்றும் இதை மீறினால் தலைமை நிர்வாகக் குழு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்றும் இக் கூட்டம் தெரியப்படுப்படுத்துகிறது. கட்சி வளர்ச்சிக்கு கட்டுக்கோப்பு என்பது மிக முக்கியம் என்றும் சுட்டிக் காட்டுகிறது.

4. பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் தலைமை நிர்வாகக் குழு ஒப்புதலுடன், கட்சியின் பொதுச் செயலாளருக்கு மட்டுமே உள்ளது என கட்சியின் By law பக்கம் எண் 15, விதி : 16 என்பது தெளிவாக இருப்பதை இக் கூட்டம் சுட்டிக் காட்டுவதுடன், கட்சியிலிருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களின் அறிவிப்புகள் செல்லாது என்பதையும், அதை புறக்கணிக்குமாறும் இக் கூட்டம் கட்சியினரை கேட்டுக் கொள்கிறது..

5..கட்சிப் பணிகளை விரிவுப்படுத்துவது குறித்து விவாதிக்க எதிர்வரும் 19.02.2023 அன்று திருச்சியில் சிறப்பு நிர்வாகக் குழுவை கூட்டுவது என்று இக் கூட்டம் முடிவு செய்கிறது.

6. கடந்த 07.02.2023 அன்று தஞ்சை செயற்குழுவை தொடர்ந்து தலைமை நிர்வாகக் குழுவுக்கு, கட்சி கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்த 37 மாவட்டங்கள் உட்பட வெளிநாட்டு மண்டலங்கள், அணிகள் ஆகியவற்றின் விபரங்களையும், அதன் பிறகு அதற்கு அங்கீகாரம் தந்த மாவட்டங்களின் பட்டியலையும் சிறப்பு நிர்வாகக் குழுவில் சமர்ப்பித்த பிறகு வெளியிடுவது என்றும் இக் கூட்டம் முடிவு செய்கிறது.

ஒரு மணி நேர ஆலோசனைக்குப் பிறகு கூட்டம் நிறைவுப் பெற்றது.