ஐக்கிய அரபு அமீரகம்-அல் அய்ன் Indian Social Centre சார்பில், புனித ரமலானை முன்னிட்டு, திருக்குர்ஆன் ஓதும் இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது.
#மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றியுள்ளார்.
அவரது உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின் வருமாறு…
ISC அமைப்பில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள் என எல்லோரும் இந்தியர்கள் என்ற சகோதரத்துவ உணர்வோடு இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்துவதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதுதான் உலகத்திற்கு நாம் கூறும் செய்தியாகும்.
இத்தகைய ஒற்றுமைத்தான் திருக்குர்ஆன் போதிக்கிறது, அன்பை, சகோதரத்துவத்தை, சகிப்புத் தன்மையை, வணிகத்தை, அரசியலை, ஒடுக்கப்பட்டோரின் விடுதலையை, சமத்துவத்தை, வாழ்வியலைதான் குர்-ஆன் போதிக்கிறது. அதனால்தான் இதை உலகப் பொதுமறை என்கிறோம். இது அனைவருக்குமான வழிகாட்டும் வேத நூலாகும். இதை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.
திருக்குர் ஆனின் சிறப்பு என்னவென்றால் அது யாராலும் எழுதப்பட்டதல்ல- வானவர் ஜிப்ரயில் (அலை) மூலம் ஒலி வடிவில் அது நபிகளாருக்கு அருளப்பட்டது. குரல் வடிவில் வழங்கப்பட்ட வேத வரிகளை பின்னர் கலீபாக்கள் அதை தொகுத்து ஓரே குர் ஆன் என உலகத்திற்கு அளித்தார்கள்.
திருக்குர்ஆன் மிகச் சிறந்த இலக்கிய நூலும் கூட. இதை மிகச் சிறந்த இலக்கியம் என இறைவனே கூறுகிறான்.
நமது தமிழும், மலையாளமும், கன்னடமும், தெலுங்கும் செம்மொழிகளாகும். தமிழில் எதுகை மோனை சந்தங்களுக்கு தனி ரசனை உண்டு. இதுபோல் அரபியும் ஒரு செம்மொழியாகும்.
திருகுர்ஆன் அரபியில்தான் அருளப்பட்டது. திருகுர்ஆனின் பல வசனங்கள் எதுகை, மோனையுடன், சுவையான சந்தங்களுடன் அமைந்திருக்கின்றன.
ஒரு முறை அண்ணா அவர்கள் தேர்தல் பரப்புரையின் போது, பேசுவதற்கு உரிய நேரமில்லை. மெரினாவில் பேசிய கூட்டத்தில்
” நாம் இருப்பதோ கடற்கரை …
மாதமோ சித்திரை… நமக்கு வருவதோ நித்திரை …
மறக்காமல் உதய சூரியனில் இடுவீர் முத்திரை”
என்றார். அது இன்று வரை அனைவராலும் ரசிக்கப்படுகிறது.
இதுபோல் திருக்குர்ஆனில் ஏராளமான வசனங்களையும் பார்க்க முடிகிறது. எடுத்துக்காட்டாக…
“குல்குவல்லாஹு அஹது: அல்லாஹ் சமது லம் யளிது: வலம் யூலது: வலம் ய : குஃப்வன் அஹது” என்ற வசனத்தைக்கூட சொல்லலாம்.
இது சந்தம் மாறாத; தடம் மாறாத அடுக்கு மொழி வார்த்தைகளை; அடர்த்தியாக கொண்டிருக்கிறது. இதை பொருள் அறிந்து படிக்க வேண்டும்.
எந்த மொழியும், யாருக்கும் எதிரானது அல்ல அதுபோலத்தான் வேதநூல்களும்.
குர் ஆன், பைபில், பகவத்கீதை, திருக்குறள் என அனைத்தையும், அனைவரும் வாசிக்க வேண்டும். அப்போது தான் ஒவ்வொன்றின் சிறப்புகளை அறிந்து, மானுடத்திற்குகூறமுடியும். அந்த வகையில் திருக்குர்ஆனை அனைவருக்குமான நூலாக கொண்டு சேர்க்க வேண்டும்.
எல்லா மதத்தினரும் அங்கம் பெற்றிருக்கும் ISC இதனை முன்னெடுத்திருப்பதும், அதற்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்து, அதை தொடங்கி வைக்க செய்ததற்கும் எனது நன்றிகளை கூறி ISC-க்கு எனது வாழ்த்துக்களை கூறி விடைபெறுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
Indian social centre என்ற அமைப்பு அமீரக(UAE) அரசால் அல்-அய்னில் அங்கீகரிக்கப்பட்ட ஒரே அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் ISC யின் நிர்வாகிகள் ஜிதேஷ் புருஷோத்தமன்- பொதுச்செயலாளர், முஹம்மது அஷ்ரப் – துணை தலைவர், சந்தோஸ்குமார் – பொருளாளர், துறைராஜ் ராஜாவேல் – துணை பொதுச்செயலாளர், சாஜித் அரயல்தொப் – literary secretary, A.அசாலி அஹமது – தணிக்கையாளர், Mr.முஸ்தபா முபாரக் -தலைவர்- அல்-அய்ன் தமிழ் குடும்பம், அப்துல் காதர் – அமீரக MKP செயலாளர், J.ஷேக் தாவூது – அமீரக அலோசகர், S.முஹம்மது இம்ரான் – அல்அய்ன் மண்டல செயலாளர், R.அப்பாஸ் முஹம்மது – பொருளாளர், MKP அல்-அய்ன் மண்டலம் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்:
#MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MKP_IT_WING
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#அல்_அய்ன்_மண்டலம்.