வேலூர்.ஜூன்.04., வேலூர் மேற்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி ஆம்பூர் நகருக்கு உட்பட்ட 1வது வார்டு மளிகை தோப்பு கிளை சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் C.அன்வர் பாஷா தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொருளாளர் SMD நவாஸ் கலந்து கொண்டனர். இதில் மளிகை தோப்பு நாட்டாண்மை சகோ முனுசாமி, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சகோதரர்கள், சகோதர சமுதாயத்தவர்கள் கலந்து கொண்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதில் மஜக மாவட்ட துணை செயலாளர் TR. முன்னா (எ) நஸிர், நகர செயலாளர் பிர்தோஸ் அஹ்மத், MJTS மாவட்ட செயலாளர் அப்ரோஸ் அஹ்மத், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.M. நிஜாம்முதீன், நகர இளைஞர் அணி செயலாளர் தப்ரேஸ் அஹ்மத், நகர மருத்துவ சேவை அணி செயலாளர் ஜூபேர் அஹ்மத், நகர இளைஞர் அணி துணை செயலாளர்கள் ஷாயின்ஷ, இம்ரான் நாதிம், மருத்துவ
செய்திகள்
தன்னெழுச்சியாக மஜகவில் இணையும் இளைஞர் பட்டாளம்…! மாநில பொருளாளர் முன்னிலையில் இணைந்தனர்…!
வேலூர்_கிழக்கு. ஜூன்.04.,மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்டம் சார்பாக நேற்று 03/06/2018 இஃப்தார் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.com, அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வழி நெடுங்கிலும் கட்சி கொடிகள் பட்டொளி வீசி பறக்க சாலைகளில் திரும்பும் திசையெல்லாம் நிகழ்ச்சியின் பதாகைகள் சுவரொட்டிகளும் காணபட்டன. இஃப்தார் நிகழ்ச்சி முடிந்தவுடன் பல்வேறு கட்சிகள் இயக்கங்களை சார்ந்த இளைஞர்கள் 30க்கும் மேற்பட்டோர் தன்னெழுச்சியாக மஜக மாநில பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்களின் முன்னிலையில் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்து கொண்டனர். இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் இளைஞர்கள் படை சூழ்ந்து கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் மஜக மாநில பொருளாளருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர் இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் J.M.வசீம் அக்ரம், மாநில இளைஞர் அணி செயலாளர் S.G..அப்சர் சையது, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் N.அன்வர் பாஷா, வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் A.முஹம்மது யாசின், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்; #தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_கிழக்கு_மாவட்டம் 04.06.2018
கத்தாரில் இப்தார் நிகழ்ச்சியின் மூலம் புதிய ஒரு சமூக நல்லிணக்க கலாச்சாரத்திற்கு வித்திட்ட MKP..! மஜக மாநில பொருலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பங்கேற்ப்பு…!
தோஹா.ஜூன்.04.,கத்தார் மனிதநேய கலாச்சார பேரவை சார்பாக கடந்த 01-06-2018 மாலை 5 அளவில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சியை கிராத் ஓதி IKP பொருப்பாளர் சைப் பையாஜி தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சிக்கு கத்தார் MKP செயலாளர் உத்தமபாளையம் A. முஹம்மத் உவைஸ் தலைமை தாங்கினார். கத்தார் MKP பொருளாளர் ஆயங்குடி முஹம்மத் யாசீன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். துஹைல் மண்டல செயலாளர் அத்திக்கடை ஹாஜி முஹம்மத் வரவேற்புரை வழங்கினார். அதைதொடர்ந்து இஸ்லாம் கூறும் மனிதநேயம், நல்லிணக்கம் பற்றி அஷ்ஷேக் S.L ஸியாவுதீன் மதனி (முதுநிலை அழைப்பாளர் FANAAR) அவர்கள் சொற்பொழிவு ஆற்றினார். பின்பு ICC கத்தார் தலைவர் திருமதி மிலன் அருன்அவர்கள் பேசும்போது இது போன்று நிகழ்ச்சிகள் அதிக அளவில் தமிழ்நாட்டில் நடக்கிறது அதை கத்தாருக்கு அறிமுகப்படுத்தி ஒரு #குடும்ப_விழா போன்று திட்டமிடலை செய்த MKP நிர்வாகிகளுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார். பின்பு பேசிய மஜக தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் மவ்லவி #JS_ரிஃபாயி_ரஷாதி நல்லிணக்கம் பற்றி அனைவரையும் ஈர்க்கும் வகையில் அருமையான முறையில் சொற்பொழிவு ஆற்றினார். கூட்டம் அரங்கை தினரடித்தது. தன்னார்வளர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த சிரமப்பட்டனர். பிறகு இரண்டாம் அமர்வின் துவக்கத்தில் #ICC இணைசெயலாளர் விஜயன் பாபுராஜ் , ஆனந்த (Teysser
புதுக்கோட்டையில் மஜக சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி…!
புதுகை.ஜூன்.04.,புதுக்கோட்டை நகர #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் நேற்று 03.06.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை அசோக்நகர் பள்ளிவாசலில் சமூக நல்லிணக்க நோன்பு துறப்பு (இஃப்தார்) நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் துரைமுகம்மது, மாவட்ட பொருளாளர் ரஹீம் தாலிப், மாவட்ட துணை செயலாளர் காரம்பக்குடி ஜான் மாவட்ட துணைச்செயலாளர் N.S.ரெங்கசாமி , மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சீனிவாசன், மாவட்ட வர்தகர் அணிசெயலாளர் காதர்மைதீன், கறம்பக்குடி நகரச்செயலாளர் அமீர்அம்ஷா, நகர அவைத்தலைவர் குத்புதீன், ஒன்றிய செயலாளர் அப்துல்லா, இளைஞரணி துணைச்செயலாளர் ஷேக்சுல்தான் அஹமது, புதுகை நகரச்செயலாளர் முஹம்மது அன்சாரி , இளைஞரணி செயலாளர் பாலகுமார், மற்றும் முஹம்மது நியாஸ், முஹம்மது இப்ராகிம், சிராஜூதீன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் ஏராளமான சகோதர சொந்தங்களும், மனிதநேய சொந்தங்களும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர் . தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_புதுக்கோட்டை_மேற்கு_மாவட்டம் 03.06.2018
மஜக பஹ்ரைன் மண்டல இஃப்தார்..! அரங்கம் நிரம்பிய கூட்டம்..!!
பஹ்ரைன்.ஜூன்.04.,மஜக வின் அயல் நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பாக நடந்தேறிய சமய நல்லிணக்க இஃப்தார் , மாலை 5மணி முதலே நூற்றுக்கணக்கானோர் குவிய துவங்கினர் ஏராளமான இஸ்லாமியரல்லாதோர் கலந்து கொண்டு அன்பை வெளிப்படுத்தினர் . பஹ்ரைனில் உள்ள அரசியல் கட்சிகள் நடத்திய இப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாமியரல்லாதோர் பெருமளவில் கலந்துக்கொண்டு சிறப்பித்தது இந்த நிகழ்வில் தான் என்று எல்லோரும் வியந்து பாராட்டினர் . அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு அரசியல் நாகரீகத்தை வெளிப்படுத்தினர் , தமிழ் அமைப்புகளின் தலைவர்களும் வருகை தந்து சிறப்பித்தனர் . தமிழ் சங்க நிறுவனர் மாலிம் , தமிழ் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கையூம் , தொழிலதிபர் இணையத்துல்லா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் . மண்டல நிர்வாகிகள் மிகச்சிறப்பாக பணியாற்றி கூட்டத்தை நெறிப்படுத்தி அனைவரையும் இன்முகத்தோடு உபசரித்தனர் . மஜக இப்தார் தமிழ் சமூகத்தில் இணக்கமான சூழலை உருவாக்கியிருக்கிறது .