மேட்டுப்பாளையம். ஜூன்.05., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரம் சார்பில் இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி மஜக மாவட்ட செயலாளர் R.முஹம்மது அப்பாஸ் தலைமையில் சிவசக்தி திருமண மன்டபத்தில் நடைபெற்றது. இதில் மாநில பொருளாளர் S.S.ஹாரூண் ரஷீது M.com அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். மாநில துணை பொதுச்செயலாளர் A.K.சுல்தான் அமீர் மற்றும் மாநில துணைச் செயலாளர் A.அப்துல் பஷீர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில, மாவட்ட, நிர்வாகிகள் முன்னிலை வகிக்க, சிறப்பு விருந்தினர்களாக நகரின் முக்கியஸ்தர்களும், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து சிறபிக்க 1000க்கும் மேற்ப்பட்ட சமுதாய சொந்தங்கள் கலந்து நோன்பு துறக்க இந்நிகழ்ச்சிசிறப்புடன் நடைபெற்றது . தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_கோவை_வடக்கு_மாவட்டம்
செய்திகள்
பேரரிவாளன், கோவை அபுதாஹிர் ஆகியோரின் விடுதலை எப்போது? சட்டசபையில் தமிமுன் அன்சாரி குமுறல்!
இன்று(05-06-18) சட்டபேரவையில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், சிறைத்துறை மானிய கோரிக்கையின் போது பதிலளித்து பேசிய, மாண்புமிகு அமைச்சர் சி.வி சண்முகம் அவர்களிடம் கேள்வி எழுப்பினார். மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே... 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகளை, M.G.R நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விடுதலை செய்வதாக வாக்களித்து, முதல் கட்டமாக 67 பேரை விடுதலை செய்துள்ளீர்கள். அதற்கு எனது மனமார்ந்த நன்றிகளை மாண்புமிகு அம்மா அவர்களின் அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம் நீங்கள் கூறக் கூடிய விதிமுறைகளுக்கு உட்பட்ட கோவை அபுதாஹிர், திண்டுக்கல் மீரான் உள்ளிட்ட 28 ஆயுள் தண்டனை கைதிகளின் பட்டியலையும் நான் மாண்புமிகு முதல்வரிடமும், தங்களிடமும், மாண்புமிகு அமைச்சர் திரு.வேலுமணி அவர்களிடமும் கொடுத்துள்ளேன். அதுகுறித்து மனிதாபிமானத்துடன் பரீசிலிக்க வேண்டுகிறேன். அதுபோல் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் 02-03-16 அன்று மத்திய அரசுக்கு 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி கடிதம் எழுதினார். 02-03-16 அன்று முன்னாள் முதல்வர் தமிழக அரசு சார்பில் எழுதிய கடிதத்தின் மீது, 3 மாதங்களுக்குள் தனது பதிலை சொல்ல வேண்டும் என உச்ச
“நீட்” தோல்வியால் தற்கொலையான பிரதீபாவுக்கு நிவாரணம் வழங்குக..! தமிமுன் அன்சாரி MLA, தனியரசு MLA முதல்வரிடம் நேரில் வலியுறுத்தல்..!!
"நீட்" தேர்வெழுதி அதில் தோல்வியடைந்ததால் விரக்தியடைந்து மரணமடைந்த #பிரதீபா-வின் குடும்பத்திற்கு உரிய தேவையான நிவாரண உதவியும், அவரது குடும்பத்திற்கு ஒரு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், அதுபோல் தற்கொலைக்கு முயன்று தற்போது சிகிச்சை பெற்றுவரும் #கீர்த்தனா-வுக்கு உரிய நிவாரண உதவியும், உரிய மருத்துவ சிகிச்சையும் வழங்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA அவர்களும் தமிழக முதல்வரிடம் கோரிக்கையை நேரில் கொடுத்தனர். அவை உறுப்பினர்கள் முன்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் எடப்படியார் அவர்கள் இது குறித்து பரிசீலிப்பதாக கூறினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம் 05.06.2018
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு உதவிகள்..! மஜக சார்பில் விநியோகம்..!!
காஞ்சி.ஜூன்.04., மனிதநேய ஜனநாயக கட்சி காஞ்சி தெற்கு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் அகதிகளாக வசித்துவரும் #ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு நேற்றைய தினம் 03.06.2018 ஞாயிற்றுக்கிழமை மஜக பொதுசெயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, அவர்களின் அறிவுறுத்தளின் பேரில், மாநில செயலாளர் எ.சாதிக் பாஷா அவர்கள் தலைமையில் காஞ்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் அம்மக்களுக்கு ஸஹர் மற்றும் இஃப்தாருக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது. மொத்தம் 38 குடும்பங்களுக்கு தேவையான சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள அரிசி, பருப்பு, எண்ணெய், மசாலா, சர்க்கரை போன்ற அத்தியாவசியமான உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் யு.ரஹ்மத்துல்லாஹ், மாவட்ட துணை செயலாளர் அப்துல் சர்தார், மாவட்ட இளைஞரணி செயலாளர் இனாயத்துல்லாஹ், மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் தமீம் அன்சாரி, கானத்தூர் தீன் பாய் ஆகியோர் கலந்துகொண்டு உதவிகளை வழங்கினர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_காஞ்சி_தெற்கு_மாவட்டம்
நோன்பு கஞ்சியை எல்லோருக்கும் வழங்கி மகிழ்வோம்!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு..) கடந்த 5 ஆண்டுகளாக ஒவ்வொரு ரமலானினும் #நோன்பு_கஞ்சி-யை அனைத்து சமூக மக்களுக்கும் கொண்டு செல்வதை பரப்புரையாகவே முன்னெடுத்து வருகிறேன். அதை இவ்வாண்டும் வலியுறுத்திக்கிறேன். இந்தியாவில் சமூக நல்லிணக்கத்தை வலிமைப்படுத்தும் நோக்கோடு முதல் பிரதமர் நேரு அவர்கள் உருவாக்கிய அணுகுமுறைதான் #இஃப்தார் நிகழ்ச்சிகள் ஆகும். இதில் எல்லா சமூக மக்களும் ஒன்றுக்கூடி விருந்துண்டு மகிழ்வது நல்ல கலாச்சாரமாக மாறியிருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும், மதரஸாகளிலும் இஃப்தார் நிகழ்ச்சிகளை நடத்தி அதில் இந்து, கிறிஸ்தவ, தலித் சகோதர்களை அழைத்து நோன்பு கஞ்சியை அவர்களுக்கு பரிமாறிட வேண்டும். இதன்மூலம் சமூக நல்லிணக்கைத்தையும், புரிதலையும், உறவுகளையும் வளர்த்து எடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் வீதிகளிளும், அடுக்குமாடி வீடுகளிலும் உள்ள சகோதர்களுக்கு நோன்பு கஞ்சியை அன்போடு அனுப்பிவையுங்கள். பொது இடங்களில் நோன்பு கஞ்சியை வினியோக்கிகும் பணியைக்கூட செய்யலாம். ஜமாத்துல் உலமா, தமுமுக, IKP, ஜமாத்தே இஸ்லாமி, TNTJ, PFI, JAQH, INTJ, போன்ற சமூக அமைப்புகள், இதை சமூக நல்லிணக்க பணியாக முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். "மனிதர்களில் மிக சிறந்தவர்கள் யார் என்றால், இணக்கத்தை