மஜக சார்பில் மேட்டுப்பாளையத்தில் இஃப்தார் நிகழ்ச்சி..! மாநில நிர்வாகிகள் பங்கேற்பு..!!

மேட்டுப்பாளையம். ஜூன்.05., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரம் சார்பில் இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி மஜக மாவட்ட செயலாளர் R.முஹம்மது அப்பாஸ் தலைமையில் சிவசக்தி திருமண மன்டபத்தில் நடைபெற்றது.

இதில் மாநில பொருளாளர் S.S.ஹாரூண் ரஷீது M.com அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

மாநில துணை பொதுச்செயலாளர் A.K.சுல்தான் அமீர் மற்றும் மாநில துணைச் செயலாளர் A.அப்துல் பஷீர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநில, மாவட்ட, நிர்வாகிகள் முன்னிலை வகிக்க, சிறப்பு விருந்தினர்களாக நகரின் முக்கியஸ்தர்களும், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து சிறபிக்க 1000க்கும் மேற்ப்பட்ட சமுதாய சொந்தங்கள் கலந்து நோன்பு துறக்க இந்நிகழ்ச்சிசிறப்புடன் நடைபெற்றது .

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_கோவை_வடக்கு_மாவட்டம்