You are here

சரத்குமார் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி..! மஜக பொதுச்செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

சென்னை.ஜூன்.05., இன்று தி.நகரில் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வுக்கு கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார்.

இதில் பேசிய சரத்குமார் அவர்கள் தமது கட்சியின் பெயரில் சமத்துவம் இருப்பது போல, இந்நிகழ்வில் எல்லோரையும் அழைத்திருப்பதாக கூறி பெருமைப்பட்டார்.

தான், புதுக்கல்லூரி மாணவர் என்றும், அதன் மூலம் இஸ்லாத்தை அதிகமாக அறிந்ததாக கூறினார்.

அவர், கவிக்கோ அப்துர் ரஹ்மானின் நோன்பு குறித்த கவிதையை வாசித்தார்.

அடுத்தமுறை ஐயாயிரம் பேர் பங்கேற்கும் இஃப்தாரை நடத்துவேன் என்று கூறி கைத்தட்டலை அள்ளினார்.

#மனிதநேய_ஜனநாயக_கட்சி பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA பேசும் போது, சி.பா. ஆதித்தனார் அவர்கள் திருச்செந்தூரில் போட்டியிட்ட போது தோல்வி அடைந்தார். ஆனால் காயல்பட்டினத்தில் தான் அதிக வாக்குகளை பெற்றார். இதை பத்திரிக்கைகள், ஆதித்தனார் ‘திருச்செந்தூரில் தோல்வி காயல்பட்டினத்தில் வெற்றி’ என எழுதின.

இதை அவர் கூறியதும் அரங்கம் அதிர்ந்தது. அது போல் காமராஜருக்கும், அவரது அமைச்சர் கடையநல்லூர் மஜீதுக்கும் இருந்த நட்பை பற்றியும் எடுத்துக்கூறியவர், அண்ணன் சரத்குமார் அவர்கள் காமராஜர் வழியில் புகழ் பெற வேண்டும் என வாழ்த்தினார்.

பிறகு நிகழ்ச்சி முடிந்ததும் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA விடம், சரத்குமார் பேசும்போது, ஆதித்தனார் திருச்செந்தூரில் தோல்வி அடைந்த பிறகு தான் பெரும் புகழ் அடைந்தார். அதுபோல நான் திருச்செந்தூரில் தோல்வி அடைந்தேன். அடுத்து பெரிய வெற்றியை பெறுவேன் என இந்த ரமலானில் நம்புகிறேன் என்றார். அதற்கு பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA வாழ்த்துக் கூறினார்.

இந்நிகழ்வில் தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் ஞானதேசிகன், தனியரசு MLA, மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், சிபிஎம் கட்சியின் செயற்குழு உறுப்பினர் லாசர் Ex MLA, டாக்டர் K.V.S ஹபிப் முஹம்மது, இல்யாஸ் ரியாஜி, ஜவஹர் அலி, கே.எம் சரீப், அமீர் அம்ஸா, President அபூபக்கர், அப்பலோ ஹனிபா, உள்ளிட்ட இந்து, கிருத்துவ சமூகங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தென்சென்னை_மேற்கு_மாவட்டம்

Top