விழுப்புரம். ஜூன்.06., மருத்துவபடிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெருவலூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வு தோல்வியால் மனமுடைந்து எலி மருந்தை குடித்தார். 10-ம் வகுப்பில் 495 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பில் 1125 மதிப்பெண்களும் பெற்றவர் பிரதீபா. விஷம் குடித்த நிலையில் ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரதீபா மரணமடைந்தார். இன்று பிரதீபாவின் குடும்பத்தை நேரில் சென்று #மனிதநேய_ஜனநாயக_கட்சி நிர்வாகிகள் ஆறுதல் கூறினார். இதில் மஜக விழுப்புரம் மாவட்ட செயலாளர் இப்ராஹீம் மற்றும் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் தலைமையில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_விழுப்புரம்_மாவட்டம் 06.06.2018
செய்திகள்
தன்னெழிச்சியாக மஜகவில் இனையும் சகோதரர்கள் !!!
கோவை.ஜூன்.04.,மனிதநேய ஜனநாயக கட்சி கோவை வடக்கு மாவட்டம் மேட்டுபாளையத்தில் இஃப்தார் நிகழ்ச்சி, ஆலோசனை கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது, இந்நிகழ்ச்சி முடிந்ததும் மேட்டுபாளையத்தை சார்ந்த பல்வேறு இயக்கங்கள் கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் R.முஹம்மது அப்பாஸ், தலைமையில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீது M.com, அவர்கள் முன்னிலையில் 50க்கும் மேற்பட்டோர் தங்களை மஜகவில் இனைத்து கொண்டனர். இந்நிகழ்வில் மஜக மாநில துனை பொதுச்செயலாளர் K.சுல்தான்அமிர், மாநில துனை செயலாளர் Tkm.பஷிர், மாநில இளைஞர் அணி துனை செயலாளர் N.அன்வர்பாஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் களந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_வடக்கு_மாவட்டம்
தூத்துக்குடியில் பணியாற்றிய இன்ஸ்பெக்டார்கள் ஹரிஹரன், வனிதா இடமாற்றம்.! மஜக கோரிக்கை வெற்றி !
தூத்துக்குடி. ஜூன்.06., #ஸ்டெர்லைட்டு-க்கு எதிரான போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களிடம் அங்கு பனியாற்றும் #இன்ஸ்பெக்டார்கள் ஹரிஹரன், மற்றொரு இன்ஸ்பெக்டரும் அவரது மனைவியுமான வனிதா ஆகியோர் கடும் நெருக்கடிகளை கொடுத்து வந்தனர். அவர்களது மிரட்டல் போக்குகளால் பாதிக்கப்பட்ட #தூத்துக்குடி மக்கள், மே-29 அன்று #மனிதநேய_ஜனநாயக_கட்சி பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களிடம் முறையிட்டனர். அன்று பத்திரிகையாளரிடம் பேசிய அவர் இருவர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று #தமிழக_அரசுக்கு_கோரிக்கை விடுத்து. இது குறித்து ஆட்சி மேலிடத்திலும் பேசுவதாக கூறி, அவ்வாரே அங்கும் முறையிட்டார். இந்நிலையில் இன்று அவ்விருவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை மனிதநேய ஜனநாயக கட்சி மூலம் சரி செய்யப்பட்டிருக்கிறது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தூத்துக்குடி_தெற்கு_மாவட்டம் 06.06.2018
கோவை வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மஜக மாநில பொருளாளர் பங்கேற்ப்பு !!!
கோவை.ஜூன்-4., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை வடக்கு மாவட்டம் மேட்டுபாளையத்தில் இஃப்தார் நிகழ்ச்சி முடிந்ததும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீது M.com, அவர்கள் கட்சியின் வளர்ச்சி, செயல்திட்டங்கள், கட்சியின் நிர்வாகிகளின் செயல்பாடுகள் பற்றி விளக்கமாக சிறப்புரை நிகழ்த்தினார்கள். மாநில துனை பொதுசெயலாளர் K.சுல்தான் அமிர் அவர்கள் இஸ்லாத்தின் மான்புகள், மனிதநேயம் பற்றி சிறப்பாக எடுத்துறைத்தார்கள். இந்நிகழ்வில் மாநில துனை செயலாளர் Tkm.பஷிர், இளைஞர் அணி மாநில துனை செயலாளர் N.அன்வர்பாஷா, மாவட்ட செயலாளர் R.முஹம்மது அப்பாஸ், மாவட்ட பொருளாளர் M.காஜா மைதின், மாவட்ட துனை செயலாளர்கள் Smr.முஹம்மது பாரி, அன்னூர் A.முஹம்மது ரியாஸ், Ems.ரபிதீன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் யாசர் அராபத், தகவல் தொழில் நுட்ப மாவட்ட செயலாளர் அப்பாஸ், மற்றும் நகர செயலாளர் முஹம்மது நிவாஸ், நகர பொருளாளர் சுல்தான் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_வடக்கு_மாவட்டம்
சரத்குமார் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி..! மஜக பொதுச்செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
சென்னை.ஜூன்.05., இன்று தி.நகரில் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வுக்கு கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். இதில் பேசிய சரத்குமார் அவர்கள் தமது கட்சியின் பெயரில் சமத்துவம் இருப்பது போல, இந்நிகழ்வில் எல்லோரையும் அழைத்திருப்பதாக கூறி பெருமைப்பட்டார். தான், புதுக்கல்லூரி மாணவர் என்றும், அதன் மூலம் இஸ்லாத்தை அதிகமாக அறிந்ததாக கூறினார். அவர், கவிக்கோ அப்துர் ரஹ்மானின் நோன்பு குறித்த கவிதையை வாசித்தார். அடுத்தமுறை ஐயாயிரம் பேர் பங்கேற்கும் இஃப்தாரை நடத்துவேன் என்று கூறி கைத்தட்டலை அள்ளினார். #மனிதநேய_ஜனநாயக_கட்சி பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA பேசும் போது, சி.பா. ஆதித்தனார் அவர்கள் திருச்செந்தூரில் போட்டியிட்ட போது தோல்வி அடைந்தார். ஆனால் காயல்பட்டினத்தில் தான் அதிக வாக்குகளை பெற்றார். இதை பத்திரிக்கைகள், ஆதித்தனார் 'திருச்செந்தூரில் தோல்வி காயல்பட்டினத்தில் வெற்றி' என எழுதின. இதை அவர் கூறியதும் அரங்கம் அதிர்ந்தது. அது போல் காமராஜருக்கும், அவரது அமைச்சர் கடையநல்லூர் மஜீதுக்கும் இருந்த நட்பை பற்றியும் எடுத்துக்கூறியவர், அண்ணன் சரத்குமார் அவர்கள் காமராஜர் வழியில் புகழ் பெற வேண்டும் என வாழ்த்தினார். பிறகு நிகழ்ச்சி முடிந்ததும் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA விடம், சரத்குமார் பேசும்போது,