தூத்துக்குடியில் பணியாற்றிய இன்ஸ்பெக்டார்கள் ஹரிஹரன், வனிதா இடமாற்றம்.! மஜக கோரிக்கை வெற்றி !

தூத்துக்குடி. ஜூன்.06., #ஸ்டெர்லைட்டு-க்கு எதிரான போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களிடம் அங்கு பனியாற்றும் #இன்ஸ்பெக்டார்கள் ஹரிஹரன், மற்றொரு இன்ஸ்பெக்டரும் அவரது மனைவியுமான வனிதா ஆகியோர் கடும் நெருக்கடிகளை கொடுத்து வந்தனர்.

அவர்களது மிரட்டல் போக்குகளால் பாதிக்கப்பட்ட #தூத்துக்குடி மக்கள், மே-29 அன்று #மனிதநேய_ஜனநாயக_கட்சி பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களிடம் முறையிட்டனர்.

அன்று பத்திரிகையாளரிடம் பேசிய அவர் இருவர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று #தமிழக_அரசுக்கு_கோரிக்கை விடுத்து. இது குறித்து ஆட்சி மேலிடத்திலும் பேசுவதாக கூறி, அவ்வாரே அங்கும் முறையிட்டார்.

இந்நிலையில் இன்று அவ்விருவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை மனிதநேய ஜனநாயக கட்சி மூலம் சரி செய்யப்பட்டிருக்கிறது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தூத்துக்குடி_தெற்கு_மாவட்டம்
06.06.2018