கோவை.அக்.16., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்டம் மத்திய பகுதி N.H.ரோடு கிளையின் சார்பில் மரக்கடை பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. மஜகவின் மத்தியபகுதி செயலாளர் பூ.காஜா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் அப்துல் பஷீர், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர் TMS.அப்பாஸ், மத்திய பகுதி பொருளாளர் கமால் மற்றும் நிர்வாகிகள் ஜமால், முத்தலி, வீடியோரபி, ரபீக், பைசல் ஆகியோர் கலந்துகொண்டனர், அப்பகுதியில் உள்ள புனித சவேரியார் பள்ளி குழந்தைகள் 300 பேருக்கும், பேருந்து பயணிகளுக்கும் அருகில் உள்ள வீடுகளுக்கும் சென்று நிலவேம்பு கசாயம் வழங்கினர். மேலும் அவ்வழியே சென்ற பொதுமக்களும் ஆர்வமுடன் பெரும் திரளாக வந்து பயன் பெற்றனர். அதன் பிறகு அந்த பகுதியில் அகற்றப்படாமல் உள்ள குப்பைகள் மற்றும் சாக்கடை கழிவுகளை பார்வையிட்ட மஜகவினர் உடனடியாக அதிகாரிகளை தொடர்புகொண்டு உடனடியாக அப்புறப்படுத்த வலியுறுத்தினார்கள். தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 16/10/2017
முகாம்கள்
நாச்சிகுளம் பகுதியில் மஜக சார்பில் தொடர்ந்து 3வது டெங்கு விழிப்புணர்வு…
திருவாரூர்.அக்.15., திருவாரூர் மாவட்டம் நாச்சிக்குளத்தில் இன்று 15/10/2017 ஞாயிறு காலை 11 மணியளவில் உதயை-நாச்சிகுளம் கடைவீதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணியுடன், நாச்சிகுளம் ஜமாத் குவைத் பேரவை நாச்சிகுளம் ஜமாத் அமீரக பேரவை, நாச்சிகுளம் ஜமாத் தம்மாம் பேரவைகள் இணைந்து நடத்திய டெங்கு ஒழிப்பு சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் தொடர் நிலவேம்பு கசாயம் வழங்கும் மூன்றாவது முகாம் நடைபெற்றது. இம்முகாம் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாச்சிகுளம் ஜமாத் குவைத் பேரவை துனை தலைவர் ஜெ.அப்துல் ரஹ்மான், நாச்சிகுளம் ஜமாத் தம்மாம் பேரவை துணை தலைவர் M.L.இப்ராஹிம் அலி, நாச்சிகுளம் ஜமாத் அமீரக பேரவை துணை செயலாளர் A.ஹாஜா முகைதீன், மஜக கிளை செயலாளர் N.ஜெஹபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். முத்துப்பேட்டை சரக காவல் ஆய்வாளர் திரு.ராஜேஸ் அவர்கள் நிலவேம்பு கசாயம் வழங்கி டெங்கு ஒழிப்பு மற்றும் சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் C.N.பழனிவேல் அவர்களும், கூட்டுறவு சங்க தலைவரும் உதயை-நாச்சிகுளம் வர்த்தக சங்க தலைவருமான தி.பக்கிரிசாமி அவர்களும், நுகர்வோர் பாதுகாப்பு குழுவின்
குடந்தையில் மஜகவின் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..!
குடந்தை.அக்.15., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முஹம்மது மஃரூப் அவர்கள் நிலவேம்பு கசாயம் முகாமை துவங்கி வைத்தார். முகாமில் வியாபாரிகள், தெருவாசிகள், பொதுமக்கள் என் 300க்கும் மேற்பட்டோர்க்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட பொருளாளர் இக்பால் சேட், மாவட்ட துணை செயலாளர் சேக் அப்துல்லா, பாபநாசம் மு.ஒன்றிய செயலாளர் செல்லப்பா, நகர செயலாளர் ஆசாத், IKP செயலாளர் அல்லாபக்ஸ், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் குடந்தை முஹம்மது ரியாஜ் மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தஞ்சை_வடக்கு_மாவட்டம் 15.10.2017.
சென்னை துறைமுகம் பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..! மஜக மாநில பொருளாளர் துவங்கி வைத்தார்..!!
சென்னை.அக்.15., மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் பகுதி (57, 60 ) வட்டத்திற்குட்பட்ட 2 இடத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரசிது M.Com., அவர்கள் முகாமை துவக்கி வைத்தார். முகாமில் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. இம்முகாமில் மாவட்ட செயலாளர் A. முஹம்மது ஹாலித் M.Com., திருவள்ளுவர் மேற்கு மாவட்ட செயலாளர் நாசர், து.செயலாளர் அப்பாஸ், தொழிலாளர் அணி செயலாளர் முஸாகனி, IKp பொருளாளர் தீன் பாய்,பகுதி செயலாளர் சீனி முஹம்மது, பகுதி பொருளாளர் காஜா, துணை செயலாளர் ஜினைத் வில்லிவாக்கம் பகுதி செயலாளர் ஷாகுல், எழும்பூர் பகுதி பொருளாளர் கலாம் மற்றும் வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK-IT-WING 57,60 வது வட்டம், துறைமுகம் பகுதி, மத்திய சென்னை மாவட்டம்.
திருப்பூர் மாவட்டத்தில் மஜகவின் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்!
திருப்பூர் .அக்.15., மனிதநேய ஜனநாயக கட்சி திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பில் செரங்காடு பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. மஜகவின் திருப்பூர் மாவட்ட செயலாளர் இ.ஹைதர் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் S.முஸ்தாக் அஹமது அவர்கள் முன்னிலை வகித்தார். செரங்காடு பள்ளிவாசல் அருகே நடைபெற்ற இம்முகாமில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் M.காதர்கான், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நெளஃபில் ரிஜ்வான், செரங்காடு கிளை பொறுப்பாளர்கள் J.அப்துல் அக்கிம், J.நஸ்ருதீன், M.முகம்மது ஆசிப், B.அப்பாஸ், B.காதர் ஆகியோர் கலந்துகொண்டனர். மஜகவின் செயலவீரர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கும் சென்று நிலவேம்பு கசாயம் வழங்கினர் மேலும் அவ்வழியே சென்ற பொதுமக்களும் ஆர்வமுடன் பெரும் திரளாக வந்து பயன் பெற்றனர். அப்போது அங்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த நிர்வாகி தோழர் மூர்த்தி அவர்கள் மஜகவின் மக்கள் நல பணிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த முகாம் ஏற்பாடுகளை செரங்காடு J.செளகத் அலி அவர்கள் சிறப்பாக செய்திருந்தார். தகவல் #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #திருப்பூர்_மாவட்டம் 15/10/2017