நாச்சிகுளம் பகுதியில் மஜக சார்பில் தொடர்ந்து 3வது டெங்கு விழிப்புணர்வு…

image

image

image

திருவாரூர்.அக்.15., திருவாரூர் மாவட்டம் நாச்சிக்குளத்தில் இன்று 15/10/2017 ஞாயிறு காலை 11 மணியளவில் உதயை-நாச்சிகுளம் கடைவீதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணியுடன், நாச்சிகுளம் ஜமாத் குவைத் பேரவை நாச்சிகுளம் ஜமாத் அமீரக பேரவை, நாச்சிகுளம் ஜமாத் தம்மாம் பேரவைகள் இணைந்து நடத்திய டெங்கு ஒழிப்பு சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் தொடர் நிலவேம்பு கசாயம் வழங்கும் மூன்றாவது முகாம் நடைபெற்றது.

இம்முகாம் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நாச்சிகுளம் ஜமாத் குவைத் பேரவை துனை தலைவர் ஜெ.அப்துல் ரஹ்மான், நாச்சிகுளம் ஜமாத்  தம்மாம் பேரவை துணை தலைவர் M.L.இப்ராஹிம் அலி, நாச்சிகுளம் ஜமாத் அமீரக பேரவை துணை செயலாளர் A.ஹாஜா முகைதீன், மஜக கிளை செயலாளர் N.ஜெஹபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.

முத்துப்பேட்டை சரக காவல் ஆய்வாளர் திரு.ராஜேஸ் அவர்கள் நிலவேம்பு கசாயம் வழங்கி டெங்கு ஒழிப்பு மற்றும் சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.

முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் C.N.பழனிவேல் அவர்களும், கூட்டுறவு சங்க தலைவரும் உதயை-நாச்சிகுளம் வர்த்தக சங்க தலைவருமான தி.பக்கிரிசாமி அவர்களும்,
நுகர்வோர் பாதுகாப்பு குழுவின் கௌரவ தலைவரும், தமிழ் சங்க தலைவருமான ஓய்வு பெற்ற ஆசிரியர் பொன்.வேம்பையன் அவர்களும், பத்திரிக்கையாளர்  முகைதீன் பிச்சை அவர்களும், தே.மு.தி.க K.செல்லத்துரை அவர்களும், நாச்சிகுளம் ஜமாத் செயலாளர் அலாவுதீன் ஜமாத் பொருளாளர் நபில பக்கர் ஆகியோர்களும் கலந்துகொண்டு சுகாதாரத்தின் அவசியம் பற்றி எடுத்துரைத்தனர்.

மேலும் மஜக தொண்டர்களும், சமூக ஆர்வலர்களும், வர்த்தகர்களும் பொதுமக்களும் பெரும் திரளாக கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். முன்னதாக நிகழ்ச்சி ஏற்பாடுகளை சமூக ஆர்வலர் நாச்சிகுளம் ரசீது அவர்களும், அ.சேக் அப்துல்லா அவர்களும்  செய்திருந்தனர்.

இறுதியாக நாச்சிகுளம் ரசீது அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT-WING
#நாச்சிகுளம்
#திருவாரூர்_மாவட்டம்