சென்னை.அக்.23.,மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மத்திய சென்னை மாவட்டம், திருவல்லிக்கேணி பகுதியில் லாயிட்ஸ் ரோடு மார்க்கெட்டிலும், ஐஸ் ஹவுஸ் ஷேக் தாவூத் தெரு எதிரிலும் நிலவேம்பு குடிநீர் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கபட்டது. மேலும் நிலவேம்பு குடிநீர் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. லாயிட்ஸ் ரோடு மார்க்கெட் முகாமை மாநில செயலாளர் சகோ.A.சாதிக் பாஷா அவர்களும், ஐஸ் ஹவுஸ் முகாமை மாநில துணை செயலாளர் சகோ.புதுமடம் அனீஸ் அவர்களும் துவங்கி வைத்தனர். இதில் மாவட்ட பொருளாளர் பிஸ்மில்லாஹ் கான், மாவட்ட து.செயலாளர் பீர் முஹம்மது மற்றும் அமீர் அப்பாஸ், பகுதி பொருளாளர் ஹசன், பகுதி து.செயலாளர்கள் முஹம்மத் அலி இஷாக், ஜமால் முஹம்மது மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மத்திய_சென்னை_மாவட்டம்
முகாம்கள்
சென்னை பெரம்பூர் பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..!
சென்னை.அக்.22., மனிதநேய ஜனநாயக கட்சியின் வட சென்னை மாவட்டம், பெரம்பூர் பகுதி முத்தமிழ் நகரின் சார்பாக இன்று (22/10/2017) காலை 11.00 மணியளவில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாபெரும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில துணைச் செயலாளர் புது மடம் அனிஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா ஆகியோர் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாமை தொடங்கி வைத்தனர். இம்முகாமில் பெரம்பூர் பகுதி செயலாளர் அக்பர், பகுதி பொருளாளர் அப்துல் ரஷித் மற்றும் கிளை நிர்வாகிகள் அனைவரும் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தினை வழங்கினர். பொதுமக்கள் நிலவேம்பு கசாயம் அறுந்தியும், வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு வாங்கிச்சென்றும் பயன்பெற்றனர். மஜகவின் இந்த மனிதநேய பணிகளை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டினர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வட_சென்னை_மாவட்டம்
மஜக சார்பில் சென்னை அடையாரில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..!
சென்னை.அக்.20., மனிதநேய ஜனநாயக கட்சி தென்சென்னை மாவட்டம், வேளச்சேரி பகுதி சார்பாக அடையாரில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் இன்று (20.10.2017) மதியம் 2.00 மணியளவில் நடைப்பெற்றது. இம்முகாம் வேளச்சேரி பகுதி செயலாளர் அடையார். அன்வர்தீன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில துணைச் செயலாளர் திருமங்கலம் ஜெ.ஷமீம் அஹமது கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். மேலும் தென்சென்னை மாவட்ட செயலாளர் அடையார்.இக்பால் மற்றும் பகுதி நிர்வாகிகள், அபுபக்கர், பீர் முஹம்மது, இக்பால், நாகூர் மீரான், செய்யது, சேக், உமர், ஜாகீர், ஜூபையர், ஜப்பார், ஜாபர், நவ்ஷாத் மற்றும் தொழில் அதிபர் சேட் ஃபர்னிச்சீங் சேட் பாய் உள்ளிட்ட பகுதி மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினார்கள். இம்முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிலவேம்பு கசாயம் அருந்தி பயன் அடைந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேளச்சேரி_பகுதி #தென்சென்னை_மாவட்டம்.
தொண்டி பேரூர் மஜக சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..
தொண்டி.அக்.18., மனிதநேய ஜனநாயக கட்சி(மஜக) தொண்டி பேரூர் கிளை சார்பாக பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நேற்று (17.10.17) காலை 8மணியளவில் நடைபெற்றது. இம்முகாம் மஜக நகர செயலாளர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் Dr. சோனை முத்து மற்றும் சித்த மருத்துவ அலுவலர் Dr. ராஹீமா பானு ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். மேலும் காவல் ஆய்வாளர் நஸீர், துணை ஆய்வாளர் சுல்தான் இப்ராஹீம், ARD தொண்டு நிறுவன பணியாளர்கள் செல்வ ராணி மற்றும் ஏஞ்சல் மேரி ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர். இதில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தொண்டி_நகரம்
மூன்று ஊராட்சிக்குட்ப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளியில் மஜக சார்பில் நிலவேம்பு கசாயம் முகாம்
திருவாரூர்.அக்.16., திருவாரூர் மாவட்டம் கட்டிமேடு, ஆதிரெங்கம், சேகல் ஊராட்சியில் உள்ள மாணவ மாணவியர்க்களுக்கு கட்டிமேடு மற்றும் ஆதிரெங்கம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாம் மனிதநேய ஜனநாயக கட்சியின் திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மஜக திருவாரூர் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் ஷாகுல் ஹமீது அவர்களும், மஜக தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் கட்டிமேடு ஆசிப் முன்னிலை வகுத்தனர். இதில் கட்டிமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ,ஷா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆதிரெங்கம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் சேகல் ஊராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கு சுகாதாரத்தின் அவசியம் பற்றி எடுத்துரைத்தனர். மேலும் கட்டிமேடு கிளை துனை செயலாளர் ஹாரிஸ், மருத்துவ அணி செயலாளர் ஆசிக், ஆதிரெங்கம் கிளை செயலாளர் அப்துல்லா, இளைஞர் அணி செயலாளர் உசேன் அலி, மருத்துவ அணி செயலாளர் பைசல் நிர்வாகிகள் மஜக தொண்டர்களும் பொதுமக்களும் பெரும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இறுதியாக மஜக திருத்துறைப்பூண்டி ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் அசீம் அலிம் நன்றி கூறினார். தகவல்;- #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WINGS #கட்டிமேடு_ஆதிரெங்கம் #திருவாரூர்_மாவட்டம்