திண்டுக்கல் : மார்ச் 12,R.K.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி பாடுபடும்...! மாணவர்கள் இளைஞர்களின் போராட்டங்கள் எதிர்கால தமிழக அரசியலை தீர்மானிக்கும். வங்ககடலில் இனி ஒரு தமிழக மீனவன் கொல்லப்படுவதை தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். மத்திய அரசு இவ்விசயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா அம்மா அவர்களின் மறைவு, கலைஞரின் உடல்நலக்குறைவு ஆகியவற்றால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மை. அதிமுகவை பிளக்க பிஜேபி முயற்சிக்கிறது, திராவிட கட்சிகளை அழிக்க துடிக்கிறது, தமிழகத்தில் வகுப்புவாத சக்திகள் ஒருகாலத்திலும் காலூண்ற முடியாது. உத்தர பிரதேசத்தில் பாஜக வெற்றிப்பெற்றது அதிர்ச்சியளிக்கிறது. மதச்சார்பற்ற, சமூகநீதி சக்திகளுக்கு இது தற்காலிக பின்னடைவாகும். மணிப்பூரில் 16 ஆண்டு காலம் அந்த மக்களுக்காக தன்னையே தியாகம் செய்த ஐரோம் ஷர்மிளாவுக்கு 90 வாக்குகள் மட்டுமே கிடைத்தது ஏமாற்றமளிக்கிறது. தியாகத்திற்கு மரியாதை இல்லையோ என தோன்றுகிறது. இவ்வாறு மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் திண்டுக்கல்லில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். பேட்டியின்போது இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி, மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி, மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ஹபிபுல்லா, தலைமை
முகாம்கள்
திண்டுக்கல்லில் மாணவர் இந்தியா விழிப்புணர்வு முகாம்…
திண்டுக்கல்லில் இன்று (12.03.17) மாணவர் இந்தியாவின் சார்பில் 'சமூக நலனில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு முகாம்' நடைப்பெற்றது. இதில் பொது சேவை, பண்பாடு, தன்னம்பிக்கை, நேர்த்தியான செயல்பாடுகள், மாணவர் சமூகத்தின் வாழ்வியல், பெற்றோரின் கடமைகள், மன அழுத்தங்களை தாண்டி தேர்வில் வெற்றி பெறுதல், என பல்வேறு தலைப்புகளில் துறை சார்ந்த வல்லுனர்கள் சிறப்பாக வகுப்பெடுத்தனர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று மாணவர்களின் ஆராவாரத்திற்கிடையே எழுச்சியுரையாற்றினார். இந்நிகழ்வில் காந்தி கிராம பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியை குருவாம்மாள், ஜமால் முகம்மது கல்லூரி பேராசிரியர் பீர்பாஷா, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தோழர் மு.ப. கணேசன், கூடைப்பந்தாட்ட கழகத் தலைவர் யூசுப் அன்சாரி மற்றும் வினோத் ராஜதுறை உள்ளிட்டோர் உரையாற்றினர். மஜக மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி, மாவட்ட செயலாளர் ஹபிபுல்லா, மாவட்ட பொருளாளர் மரைக்காயர் சேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் இந்தியாவின் தலைமை நிர்வாகிகள் அஸாருதீன், ஜாவீத், பஷீர் அஹமது ஆகியோர் நிகழ்ச்சியை செம்மைப்படுத்தினர். மாணவர் இந்தியாவின் மாவட்ட நிர்வாகிகள் முகம்மது பிர்தௌஸ், மரியமனோஜ், சதீஸ் குமார், முனாப்தீன், மோகன் காமாட்சி, உமர் முக்தார், ரபிக் உள்ளிட்டோர்
திண்டுக்கல் மாவட்ட மாணவர் இந்தியா சார்பாக மாணவர், பெற்றோர்களுக்கான விழுப்புணர்வு முகாம்…
திண்டுக்கல்.மார்ச்.08., திண்டுக்கல் மாவட்டம் #மாணவர்_இந்தியா சார்பாக எதிர் வரும் 12.03.2017 அன்று நடைபெற உள்ள மாணவர் மற்றும் பெற்றோர்களுக்கான விழுப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. முகாமிற்கான அழைப்பிதழை கொடுத்து சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளை அலைக்கும் நிகழ்வு நேற்று மாணவர் இந்தியா மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மஜகவின் மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா அவர்களும் சென்றார்கள். சென்ற இடங்களில் மாணவர் இந்தியா அமைப்பினை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பெருமையாகவும் மேலும் நன்றாக வளர வாழ்த்துக்களும் தெரிவித்து கொண்டார்கள். இதில் மாணவர் இந்தியா மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மஜக மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல் : ஊடக பிரிவு, மாணவர் இந்தியா திண்டுக்கல் மாவட்டம். 08.02.2017
விழுப்புரத்தில் மஜக இரத்ததான முகாம்!
பிப்.06., விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் நகர் மனிதநேய ஜனநாயக கட்சியும், ஸ்ரீ அரவிந்த் டயாபடீஸ் மருத்துவமனையும் இனைந்து மாபெரும் இரத்ததான முகாம் 06-02-2017 இன்று நடைபெற்றது. மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது அவர்கள் கலந்துகொண்டு இரத்தம் வழங்கி முகாமை துவங்கிவைத்தார். மாநில துணை செயலாளர் புதுச்சேரி அப்துல் சமது, விழுப்புரம் மாவட்ட செயலாளர் A.M.இப்ராஹிம், துணை செயலாளர் S.முகம்மது அலி, கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் மற்றும் விழுப்புரம் நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) விழுப்புரம் மாவட்டம் 06-02-2017
வேலூரில் மஜகவின் இலவச மருத்துவ முகாம் S.S.ஹாரூன் ரஷீது துவக்கிவைத்தார்.
பிப்.05., இன்று வேலூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது. இம் முகாமை மஜகவின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com அவர்கள் துவங்கிவைத்து மருத்துவ முகாமின் பயன்கள் பற்றி உரை நிகழ்த்தினார்கள். சென்ற இடமெல்லாம் தொகுதி மக்கள் அவரை அன்போடு வரவேற்றனர். இம் மருத்துவ முகாமில் கண் பரிசோதனை, இரத்த பரிசோதனை, கிட்னி பரிசோதனை மற்றும் பொது மருத்துவ பரிசோதனைகள் செய்யவதற்கு 400கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன் அடைந்தனர். முகாமை வேலூர் நகர மஜகவினர் KVR கிட்னி கேர், ஹாஜிரா கிளினிக் மற்றும் வாசன் ஐ கேர் உடன் இணைந்து சிறப்பாக ஏற்படு செய்திருந்தனர். இதில் மாவட்ட, ஒன்றிய,நகர,வார்டு கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) வேலூர் நகரம். 05.02.17