திண்டுக்கல் : மார்ச் 12,R.K.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி பாடுபடும்…! மாணவர்கள் இளைஞர்களின் போராட்டங்கள் எதிர்கால தமிழக அரசியலை தீர்மானிக்கும்.
வங்ககடலில் இனி ஒரு தமிழக மீனவன் கொல்லப்படுவதை தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். மத்திய அரசு இவ்விசயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயலலிதா அம்மா அவர்களின் மறைவு, கலைஞரின் உடல்நலக்குறைவு ஆகியவற்றால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மை.
அதிமுகவை பிளக்க பிஜேபி முயற்சிக்கிறது, திராவிட கட்சிகளை அழிக்க துடிக்கிறது, தமிழகத்தில் வகுப்புவாத சக்திகள் ஒருகாலத்திலும் காலூண்ற முடியாது.
உத்தர பிரதேசத்தில் பாஜக வெற்றிப்பெற்றது அதிர்ச்சியளிக்கிறது. மதச்சார்பற்ற, சமூகநீதி சக்திகளுக்கு இது தற்காலிக பின்னடைவாகும்.
மணிப்பூரில் 16 ஆண்டு காலம் அந்த மக்களுக்காக தன்னையே தியாகம் செய்த ஐரோம் ஷர்மிளாவுக்கு 90 வாக்குகள் மட்டுமே கிடைத்தது ஏமாற்றமளிக்கிறது. தியாகத்திற்கு மரியாதை இல்லையோ என தோன்றுகிறது.
இவ்வாறு மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் திண்டுக்கல்லில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
பேட்டியின்போது இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி, மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி, மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ஹபிபுல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் கம்பம் கறீம் ஆகியோர் உடனிருந்தனர்.
தகவல் தொழில் நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி
#MJK_IT_WING
திண்டுக்கல் மாவட்டம்.