பிப்.05., இன்று வேலூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம் முகாமை மஜகவின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com அவர்கள் துவங்கிவைத்து மருத்துவ முகாமின் பயன்கள் பற்றி உரை நிகழ்த்தினார்கள். சென்ற இடமெல்லாம் தொகுதி மக்கள் அவரை அன்போடு வரவேற்றனர்.
இம் மருத்துவ முகாமில் கண் பரிசோதனை, இரத்த பரிசோதனை, கிட்னி பரிசோதனை மற்றும் பொது மருத்துவ பரிசோதனைகள் செய்யவதற்கு 400கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன் அடைந்தனர்.
முகாமை வேலூர் நகர மஜகவினர் KVR கிட்னி கேர், ஹாஜிரா கிளினிக் மற்றும் வாசன் ஐ கேர் உடன் இணைந்து சிறப்பாக ஏற்படு செய்திருந்தனர்.
இதில் மாவட்ட, ஒன்றிய,நகர,வார்டு கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING)
வேலூர் நகரம்.
05.02.17