வேலூர்.ஆக.11., தமிழகத்தின் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளதால், பொதுமக்கள் நலன் கருதி வேலூர் மாநகரில் படிப்படியாக பல பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட மருத்துவ சேவை அணி சார்பாக தொடரப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இன்று 11.08.2017 வெள்ளிக்கிழமை வேலூர் பழைய பேருந்து நிலையம், பள்ளிவாசல் அருகில் இன்று மதியம் மாவட்ட அமைப்புக்குழு தலைவர் S.G.அப்சர் சையத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைப்புக்குழு பொறுப்பாளர்கள் முஹம்மத் ஜாபர், முஹம்மத் வசீம், முஹம்மத் யாசீன், ஜாகீர் உசேன், சையத் உசேன் மற்றும் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபீக் ரப்பானி ஆகியோர் மற்றும் பல்வேறு கிளை மண்டல நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING வேலூர் கிழக்கு மாவட்டம். 11.08.17
முகாம்கள்
கறம்பக்குடியில் மஜக மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்..!
புதுகை.ஆக.09., கறம்பக்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் அரசு மருத்துவமனையும் இணைந்து நடத்திய மாபெரும் நிலவேம்பு குடிநீர் முகாம் இன்று காலை கறம்பக்குடி பேருந்து நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கறம்பக்குடி அரசு மருத்துவமனை அலுவலர் Dr.தாஹிராபானு , சித்த பிரிவு மருத்துவர் Dr. கண்மணி மற்றும் வியாபாரிகள் சங்க தலைவர் எவரெஸ்ட் சுரேஷ் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர் . இதில் மஜக மாவட்ட துணை செயலாளர் முகம்மது ஜான் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் , சமூகநல ஆர்வலர்கள், மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த முகாமில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் பொதுமக்கள் பயன்பெற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING கறம்பக்குடி ஒன்றியம், நகரம் புதுக்கோட்டை மாவட்டம்.
காவல்துறை மற்றும் அரசு மருத்துவமனை அதிகாரிகளுடன் மஜக கோவை மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு!
கோவை.ஆக.01., கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆகஸ்ட்-15 சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. நேற்று இந்நிகழ்விற்கு அழைப்பு கொடுப்பதற்காக மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், சிங்கை சுலைமான் ஆகியோருடன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல், துணை செயலாளர் பிரோஸ், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு மற்றும் நிர்வாகிகள் இருந்தனர். இதில் காவல்துறை ஆணையர், துணைஆணையர், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர், அரசு மருத்துவமனை RMO மற்றும் இரத்தவங்கி அதிகாரிகளை சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர்!!! தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT _WING கோவை மாநகர் மாவட்டம் 31.07.17
மாணவர் இந்தியா 2-நாள் பயற்சி முகாம் : மாணவர்கள் உற்சாகம்…
மகாபலிபுரம்.மே.17., பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தங்களது தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், சமகால அரசியலை புரிந்து கொள்ளவும் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் மாணவர் இந்தியா இரண்டு நாள் பயற்சி முகாமை மகாபலிபுரம் அருகில் உள்ள கடம்பாடி கிராமத்தில் 2017 மே-13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்தது. முதல் அமர்வு மாணவர் இந்தியாவின் மாநில செயலாளர் A.அசாருதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ் அவர்கள் “மாணவர்களும் அரசியலும்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். பாலிமர் தொலைக்காட்சியின் மூத்த செய்தியாளர் ரஹ்மான் அவர்கள் இன்றைய "ஊடகங்கள் உண்மையானதா?” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா "மாணவர்களின் அறம்” எனும் தலைப்பிலும் பின்னர் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்தார். இரண்டாம் அமர்வு தமிழ்நாடு மாணவர் இயக்கத்தின் தலைவர் இளையராஜா அவர்கள் “மாணவர்கள் ஏன் போராட வேண்டும்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். மாலை தேநீர் இடைவேளைக்கு பிறகு : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் “இன்றைய அரசியலும் மாணவர்களும்” எனும் தலைப்பில் விரிவுரையாற்றினார். தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்து நிகழ்ச்சியை மெருகூட்டினார்.
மஜக மங்கலம்பேட்டை கிளை சார்பில் இரத்ததான முகாம் !
கடலூர்.மே.17., நேற்று கடலூர் வடக்கு மாவட்டம் மங்கலம்பேட்டை கிளை மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகத்துடன் இணைந்து மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் MA. ஹாஜி முகம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது, நகர செயலாளர் S. ஃபாஸில் முன்னிலை வகித்தார்கள். இம்முகாமை மஜகவின் மாவட்டச் செயலாளர் நெய்வேலி இபுறாகிம் அவர்கள் துவக்கிவைத்தார்கள். இதில் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ், இளைஞர் அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING கடலூர் வடக்கு மாவட்டம். 16-05-2017