மஜக சார்பில் வேலூரில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு…!

image

image

image

வேலூர்.ஆக.11., தமிழகத்தின் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளதால்,  பொதுமக்கள் நலன் கருதி வேலூர் மாநகரில் படிப்படியாக பல பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட மருத்துவ சேவை அணி சார்பாக தொடரப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக இன்று 11.08.2017 வெள்ளிக்கிழமை வேலூர் பழைய பேருந்து நிலையம், பள்ளிவாசல் அருகில்  இன்று மதியம் மாவட்ட அமைப்புக்குழு தலைவர் S.G.அப்சர் சையத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் அமைப்புக்குழு பொறுப்பாளர்கள் முஹம்மத் ஜாபர், முஹம்மத் வசீம், முஹம்மத் யாசீன், ஜாகீர் உசேன், சையத் உசேன் மற்றும் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபீக் ரப்பானி ஆகியோர் மற்றும் பல்வேறு கிளை மண்டல  நிர்வாகிகள்  கலந்துகொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
வேலூர் கிழக்கு மாவட்டம்.
11.08.17