மஜக முயற்சியில் குடியாத்தம் 8-வது வார்டு MBS-நகர் பகுதியில் நகராட்சியின் பல்வேறு பணிகள்… மஜக சார்பில் நன்றி தெரிவித்தனர்.

image

image

வேலூர்.ஆக.12: வேலூர் (மே) மாவட்டம் குடியாத்தம் நகர  மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக குடியாத்தம் நகராட்சியில் மொத்தம் உள்ள 36- வார்டுகளில் தேங்கி கிடக்கும் குப்பைகள் அகற்ற வேண்டும் என்றும், சாலைகள் இல்லாத தெருக்களில் சாலைகள் போடுவதுற்க்கும், கால்வாய்கள் துர்வாரவும்,  கழிவுநீர் தேங்கி உள்ள பகுதிகளில் விஷ  பாம்புகள் அதிகம் இருப்பதால் அதனை சுத்தம் செய்து, மண்டி கிடக்கும் கருவேல மரங்கள் அகற்றி  சீரமைப்பு செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

கோரிக்கை ஏற்ற நகராட்சி நிர்வாகம் முதல் கட்டமாக MBS-நகர் 8- வது வார்டு சுற்றி உள்ள பகுதிகளில்  சாலைகள் ஓரமாக உள்ள கருவேல மரங்கள் அகற்றி நிலையில் தற்போது கழிவுநீர் செல்ல கால்வாய்கள் தூர்வார்ப்பட்டது.

களத்தில் மஜக நகர செயலாளர் S.அனீஸ், நகர பொருளாளர் முபாரக் அஹமத், நகர து.செயலாளர் சலீம், கிளை நிர்வாகிகள் அல்தாப், கபீர், முன்னா, அபுல், சேட்டு, அலீம் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

#மனிதநேய_ஜனநாயக_கட்சியின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையருக்கும் மற்றும் நகராட்சி உதவி அதிகாரிகளுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில் நுட்ப_அணி
#MJK_IT_WING
வேலூர் மே  மாவட்டம்
குடியாத்தம் நகரம்
12.08.2017