ஜன.18., வாணியம்பாடி மனிதநேய ஜனநாயக கட்சி, மாணவர் இந்தியா சார்பாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பீட்டாவை தடை செய்யக்கோரி போராட்டம் எருது விடும் போட்டி மஞ்சுவிரட்டும் போட்டிக்கு ஆதரவாகவும், பாசிச கைக்கூலியான பீட்டா அமைப்பை தடைசெய்யக் கோரியும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் போராட்டத்தில் மாணவர்கள் இளைஞர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் . மதுரை அலங்காநல்லூர் கைது செய்யப்பட்ட தோழர்களை விடுவிக்க கோரியும் நடைபெறும் போராட்டத்தில் கல்லூரி இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (IT-Wing) வேலூர் மாவட்டம் 18_01_17
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
நாகையில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் மஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள்…
ஜன.18., நாகையில் ஜல்லிகட்டுக்கு தடையை நீக்க கோரி நடைபெறும் போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக் தலைமையில், மாவட்ட செயலாளர் ரியாசுதீன், பொருளாலர் ரபிக், தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அப்துல் ரஹ்மான் மற்றும் நகர நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர் உடன் நாம் தமிழர் கட்சி நாகை மாவட்ட ஒருங்கினைப்பாளர் தங்க நிறைந்த செல்வம். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி (IT-Wing) நாகை மாவட்டம் 18_01_17
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரையில் தமுக்கத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் மஜக நிர்வாகிகள்…
ஜன.18., மதுரையில் தமுக்கத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு நடத்தகோரி மாபெரும் ஆர்பாட்டத்தில் மதுரை மஜக வடக்கு மாவட்டம் சார்பாக தண்ணீர் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் போராடும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் சேக் அகமது அப்துல்லா, மாவட்ட துணை செயலாளர்கள் அட்வகேட் A.ஜமாலூதீன், ஒத்தகடை பாருக், விவசாய அணி செயலாளர் சசிகுமார், சுலைமான், சிக்கந்தர், சின்னமீரான், ஒத்தக்கடைஅப்துல் அஜீஸ், சீனிவாசன், சையது இப்ராகிம் மற்றும் மஜகவினர் கலந்து கொண்டனர் மேலூம் ஆர்பாட்டத்தில் பங்கு பெற்று மாணவர்களுக்கு மத்தியில் சிறு உரை நிகழ்த்தி ஆதரவு தெரிவித்தனர். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி ( IT-Wing) மதுரை வடக்கு 18_01_17
பழனியில் ஜல்லிக்கட்டு ஆதரவாக நடக்கும் மாணவர்கள் போராட்டத்தில் மாணவர் இந்தியா…
ஜன.18., திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாணவர் பிரிவான "மாணவர் இந்தியா" சார்பில் தண்ணீர் பாக்கெட்கள் வழங்கப்பட்டது. தகவல் : தகவல் தொழில்நுட்ப நுட்ப அணி (IT-Wing) திண்டுக்கல் மேற்கு மாவட்டம் 18_01_17
ஆனைமலை மஜக கிளை நிர்வாகம் அமைப்பு!
ஜன.17., பொள்ளாச்சி நகரம் ஆனைமலை கிளை மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி நகர செயலாளர் தலைமையில் இன்று 17-01-2017 நடைபெற்றது. நிர்வாகம் சீரமைக்கப்படு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். A.கெய்சர் முகம்மது (கிளை செயலாளர்) 9942112383 K.ஹக்கீம் (கிளை பொருளாளர்) 9487647001 துணை செயலாளர்கள் துரை (எ) A.V. முகம்மது மைதீன் 8148204829 A.ஷாஐகான் 9488325843 A.முகம்மது 8012733015 தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி(IT_Wing) பொள்ளாச்சி நகர், கோவை தெற்கு மாவட்டம்