இடதுசாரி இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினருமான ஐயா.நல்லக்கண்ணு அவர்களை நேற்று இரவு அவரது இல்லத்தில் நானும், அவைத்தலைவர் நாசர் உமரீ அவர்களும் சந்தித்தோம். சமீபத்தில் ஐயா அவர்களின் மனைவியார் மரணமடைந்தார். பலமுறை நான் நேரில் சந்தித்து ஆறுதல் கூற முயன்றும் அது முடியாமல் போனது. நேற்று நாங்கள் போனதும், எனது சட்டமன்ற உரைகள் குறித்து பாராட்டியவர் தோழர் மகேந்திரனும், தோழர் லெனினும் என்னைப் பற்றி அடிக்கடி ஐயா அவர்களிடம் பேசுவதாகவும் கூறினார். அவரது அருமை துணைவியார் இழப்பு குறித்து நாங்கள் ஆறுதலாக பேசியப் போது, அந்த பொதுவுடைமை போராளியின் முகத்தில் சோகம் நிழலாடியது. அதைப்பற்றி மேலும் பேசாமல், மணல் கொள்ளை மற்றும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து பேசியவர், சட்டமன்றத்தில் கம்யூனிஸ்டுகள் இல்லாத குறையை நீங்கள் போக்க வேண்டும் என்றும் பேசினார். ஐயா அவர்கள் மணல் கொள்ளை தொடர்பாக வழக்கறிஞரை சந்திப்பதற்காக புறப்பட்டார். தளராத உணர்வுகள், தடுமாறாத லட்சியங்கள் என ஐயா அவர்களின் வாழ்க்கை இருக்கிறது. ஐயா அவர்களின் காலத்தில் நாம் வாழ்வது ஒரு மகிழ்ச்சியாகும். காமராஜர், காயிதே மில்லத், கக்கன் போன்றவர்களை நாம் பார்த்ததில்லை. ஐயா நல்லக்கண்ணு அவர்கள் மூவரின் வடிவமாக நம்முன்
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
குவைத் மண்டலம் MKP சால்வா கிளை நடத்தும் அரசியல் விழிப்புணர்வு கூட்டம்…
குவைத்.பிப்.16., குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை நடத்தும் அரசியல் விழிப்புணர்வு கூட்டம் 17/02/2017 வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணிக்கு முர்காப் ரவுண்டானா பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் மண்டல செயலாளர் சகோ. முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன் அவர்களும், கிளை து.செயலாளர் சகோ. சிதம்பரம் ஹாஜா மைதீன் அவர்களும் சிறப்புரை நிகழ்த்துகிறார்கள். மனிதநேய சொந்தங்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பித்து தர அழைக்கிறது. மனிதநேய கலாச்சார பேரவை மனிதநேய ஜனநாயக கட்சி தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) குவைத் மண்டலம் 55278478 - 55260018 - 60338005 E-mail: mjkkuwait@gmail.com
முதல்வர் பதவியேற்பு நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் பங்கேற்பு…
சென்னை.பிப்.16., முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு மஜக பொதுச் செயலாளர் M.தமிம் அன்சாரி MLA அவர்களுக்கு அதிமுக அவைத் தலைவர் அலைபேசியில் அழைப்பு விடுத்தார். கவர்னர் மாளிகைக்கு வருகை தந்த பொதுச் செயலாளர் அவர்களை அவைத் தலைவர் செங்கோட்டையன் அவர்களும், அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் அவர்களும் ஆரத் தழுவி வரவேற்றனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அமைச்சர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) சென்னை. 16.02.2017
மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி வாழ்த்து!
சென்னை.பிப்.16., அதிமுகவின் சார்பில் முதல்வராக பொறுப்பேற்க மாண்புமிகு எடப்பாடி.பழனிச்சாமி அவர்களை மேதகு.ஆளுநர் அவர்கள் அழைப்பு விடுத்திருப்பதை மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்கிறது. அவர் மாண்புமிகு அம்மா அவர்களின் திட்டங்களை செயல்படுத்தி ,தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. தமிழகத்தின் 21வது முதல்வராக பொறுப்பேற்கும் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். இவண், M. தமிமுன் அன்சாரி MLA, பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 16_02_17
மஜக கொடியேற்றும் நிகழ்ச்சி : திண்டுக்கல் மாவட்டத்தில் எழுச்சி!!!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராளிப்பட்டி , வேல்வார்கோட்டை பிரிவு, கொட்டதுரை, புது களராம்பட்டி, சக்கி நாயக்கண்பட்டி, மா.மு.கோவிலூர் பிரிவு. ஆகிய 6 கிராமத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாருன் ரசீது M.com அவர்கள் கொடியேற்றி கட்சியின் பணிகள், குறிக்கோள், சேவை பற்றி சிறப்புரை நிகழ்த்தினார்கள். பிறகு அப் பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அதிமுக, திமுக உள்ளிட்ட எந்தக் கட்சியும் நுழைய முடியாத வடமதுரை ஒன்றியத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி காலூன்றி அக்கிராம மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மூன்று சதவிகிததிற்கும் குறைவாகவே முஸ்லிம்கள் வாழும் இந்த 6 கிராமத்தில் முழுக்க முழுக்க இந்து சகோதரர்களால் மஜக ஆரம்பிக்கப்பட்டு மொத்த நிர்வாகத்திற்கும் இந்து சகோதர்களே தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் சூழ்நிலையை பார்க்கும்போது, இது அனைத்து சமுதாய மக்களுக்குமான கட்சி என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் மாநில துணைப் பொதுச்செயலாளர் மைதின் உலவி, மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ஹபிபுல்லா, மாவட்ட பொருளாளர் மரைக்காயர் சேட், திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் குணசேகரன், வடமதுரை ஒன்றியச் செயலாளர் முருகேசன், ஆகியோர் கலந்து கொண்டனர். திண்டுக்கள் ஒன்றிய செயளாளர்