வேலூர்.பிப்.21., நேற்று 20-02-2017 திங்கள் கிழமை வேலூர் மேற்கு மாவட்டம் வாணியம்பாடி நகரில் பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனை கண்டுபிடிக்கப்பட்டது. அதை வாங்கிய நபர் அதை விற்ற கடையின் உரிமையாளரிடம் ஏன் இப்படி மக்கள் உடலை கெடுக்ககூடிய பிளாஸ்டிக் முட்டையை விற்பனை செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு அந்த கடையின் உரிமையாளர் அந்த நபரை உடல் ரீதியிலும், மனரீதியிலும் துன்புறுத்தியுள்ளார். இதை அறிந்த மஜக மாவட்ட செயலாளர் ஜே.எம்.வசீம் அக்ரம் இதை அனைத்து கடைகளில் முறையாக சோதனை செய்ய வேண்டும் என்றும் அரசு தலையிட்டு தடுக்க வேண்டும் மேலும் சீனா முட்டைகள் இந்தியாவிற்குள் வருவதற்கு அனுமதிப்பவர்கள் மீது மத்தியஅரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இது இப்படியே தொடருமானால் மஜக சார்பில் அனைத்து கட்சி மற்றும் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் நபரை தாக்கிய கடையின் உரிமையாளர் மீது உடனடியாக காவல்துறை கைது செய்யது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி, (MJK IT-WING) வேலூர் மாவட்டம். 21.02.17
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
500 மதுக்கடைகள் மூடல் மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்பு…
(மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களின் அறிக்கை) அதிமுக அரசின் புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்ற உத்தரவு கோப்பில் முதல் கையெழுத்து போட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களின் பிரதான கோரிக்கையை மாண்புமிகு முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் அமுல்படுத்தியதைத் தொடர்ந்து, 2 வது கட்டமாக அமுல்படுத்தியிருப்பது எங்களுக்கு இந்த அரசின் மீது பெருத்த நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது. இது தவிர உழைக்கும் மகளிர் இருசக்கர வாகனம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சம் 20,000/- ரூபாய் ரொக்கம். வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை இரு மடங்காக உயர்வு. ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு நிதியுதவி 12000/- லிருந்து 18000/- ஆக உயர்வு. மீனவர்களுக்கு 5000 ஆயிரம் வீடுகள் என்பதையும் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு செய்து அமுல்படுத்தி உள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் கொள்கைகளுக்கு சிறப்பு சேர்க்கும் முகமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த முன்முயற்சிகளை மனிநேய ஜனநாயக கட்சி பாராட்டி வரவேற்கிறது. இவண், M தமிமுன் அன்சாரி MLA, பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 20.02.17
புலியங்குடியில் மதவாத பாஜக அரசை கண்டித்து மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம்…
நெல்லை .பிப்.20., நெல்லை(மேற்கு) மாவட்டம் புளியங்குடியில் நேற்று பிப்.19 அன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மத்திய அரசின் மக்கள் கொள்கைகளை கண்டித்து மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் மஜகவின் முதல் பொதுக்கூட்டம் பெரும் எழுச்சியோடு நடைபெற்றது. அனைவருக்கும் உற்சாகம் தந்தது சமூகத்தின் பலதரப்பினரும் குறிப்பாக 90சதவிகிதம் உள்ளூர் மக்கள் பங்கேற்றது இதன் சிறப்பம்சம்மாகும். இதில் மஜக பொதுசெயளாலர் M.தமீமுன் அன்சாரி MA, MLA, பொருளாளர் SS.ஹாரூன் ரஷீது M.com, மாநில செயளாலர் N.A.தைமியா ஆகியோர் சிறப்புரையாற்றினர்கள். இதில் மாவட்ட செயளாலர் தென்காசி i.மீரான், தூத்துக்குடி மாவட்ட செயளாலர் ஜாஹீர் உசேன், விருந்துநகர் மாவட்ட செயளாலர் இப்ராகிம், நெல்லை கிழக்கு மாவட்ட செயளாலர் கலில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) நெல்லை மேற்கு 20.02.17
அன்பான நாகை தொகுதி மக்களுக்கு…
(M.தமிமுன் அன்சாரி MLA - வின் விளக்கம்) அன்புக்குரிய நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி சகோதர … , சகோதரிகளே … நீங்கள் நலம்பெற வாழ்த்துக்கள் ! சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து தங்களுடன் கருத்து பரிமாற விரும்புகிறேன் . தங்களின் பேராதரவோடு நான் சட்டமன்ற உறுப்பினராகி, எளிமையான அணுகுமுறைகளோடு , நேர்மையாக பணியாற்றி வருகிறேன் . எமது தோழமை கட்சியான அதிமுகவில் ஏற்பட்ட சர்ச்சைகளை தொடர்ந்து , யார் முதல்வராக வரவேண்டும் என்ற விவாதம் அரசியலை பரபரப்பாக்கியது. இது குறித்து தொகுதி மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என தினமும் நூற்றுக்கணக்கான அலைப்பேசி அழைப்புகள் வந்தன . அதனை மதித்து வேறு யாரும் செய்யத் துணியாத அரிய முயற்சியை , என் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனைப்படி முன்னெடுத்தேன் . கருத்துப் பெட்டியை வைத்து கருத்தாய்வை மேற்கொண்டேன் . அனைவருமே பாரட்டினார்கள் . அங்கு 2 ஆயிரம் படிவங்கள் பூர்த்தியாயின . ஆனால் மக்கள் மேலும் திரண்டார்கள் . திரு . நாகராஜன் என்பவர் தலைமையில் சிலர் வந்து “ OPS - க்கு ஆதரவாக போடுங்க “ என கூச்சல் எழுப்பியதால்
புளியங்குடியில் “மதவாத மோடிஅரசை கண்டித்து மஜகவின் மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்”
நெல்லை.பிப்.19., நெல்லை மாவட்டம் புலியங்குடியில் இன்று 19-02-2017 ஞாயறு மாலை 6.30 மணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் "மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம்" நடைபெற உள்ளது. எழுச்சியுரை: M. தமிமுன் அன்சாரி MA. மாநில பொதுச் செயலாளர் மஜக , நாகை சட்டமன்ற உறுப்பினர். S.S. ஹாரூன் ரஷீது M.Com, மாநில பொருளாளர் மஜக சிறப்புரை : K.M.மைதீன் உலவி மாநில இணைப் பொதுச் செயலாளர் மஜக N.A.தைமிய்யா மாநில செயலாளர் மஜக I. மீரான் நெல்லை மாவட்ட செயலாளர் மஜக இடம் : ரஹ்மத் பால்பண்ணை (காயிதே மில்லத் திடல்) தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) நெல்லை மாவட்டம். 19.02.17