500 மதுக்கடைகள் மூடல் மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்பு…

(மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களின் அறிக்கை)

அதிமுக அரசின் புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்ற உத்தரவு கோப்பில் முதல் கையெழுத்து போட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

எங்களின் பிரதான கோரிக்கையை மாண்புமிகு முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் அமுல்படுத்தியதைத் தொடர்ந்து, 2 வது கட்டமாக அமுல்படுத்தியிருப்பது எங்களுக்கு இந்த அரசின் மீது பெருத்த நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.

இது தவிர உழைக்கும் மகளிர் இருசக்கர வாகனம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சம் 20,000/- ரூபாய் ரொக்கம்.

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை இரு மடங்காக உயர்வு.

ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு நிதியுதவி 12000/- லிருந்து 18000/- ஆக உயர்வு.

மீனவர்களுக்கு 5000 ஆயிரம் வீடுகள் என்பதையும் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு செய்து அமுல்படுத்தி உள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் கொள்கைகளுக்கு சிறப்பு சேர்க்கும் முகமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த முன்முயற்சிகளை மனிநேய ஜனநாயக கட்சி பாராட்டி வரவேற்கிறது.

இவண்,
M தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
20.02.17