சென்னை.பிப்.21., கடந்த 28.2. 2016ல் துவக்கப்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சி, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்து, எழுச்சியோடு பயணித்து வருகிறது.
28.2. 2017- மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க நாளாகும். இந்த நாளை கட்சியின் வளர்ச்சிக்குரிய விழாவாக அமைத்திட வேண்டும்.
★ உறுப்பினர் சேர்க்கை,
★ கொடி ஏற்றுதல், மரக்கன்று நடுதல்,
★ இரத்த தானம் மற்றும் மருத்துவ முகாம் நடத்துதல்,
★ பள்ளிக்கூட மாணவ, மாணவியருக்கு உதவி செய்தல்,
★ தெருமுனைக் கூட்டம் மற்றும் பொதுக் கூட்டம் நடத்துதல்,
★ சட்டமன்றத்தில் பொதுச் செயலாளர் எடுத்து வைத்த பல்வேறு தகவல்களை பிரசுரமாக்கி விநியோகித்தல்,
★ ஆதரவற்றோர் இல்லங்களில் வசிக்கும் மக்களுக்கு உணவு மற்றும்இனிப்பு வழங்குதல்
இப்படி மக்களைச் சென்றடையும் பணிகளைச் செய்து கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளாக நடத்துவோம். மக்களின் மனதில் இடம் பெறுவோம்.
இவண்,
M. தமீமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி .
20.02.2017
#MJK IT-WING