வேலூர்.பிப்.21., நேற்று 20-02-2017 திங்கள் கிழமை வேலூர் மேற்கு மாவட்டம் வாணியம்பாடி நகரில்
பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனை கண்டுபிடிக்கப்பட்டது.
அதை வாங்கிய நபர் அதை விற்ற கடையின் உரிமையாளரிடம் ஏன் இப்படி மக்கள் உடலை கெடுக்ககூடிய பிளாஸ்டிக் முட்டையை விற்பனை செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு அந்த கடையின் உரிமையாளர் அந்த நபரை உடல் ரீதியிலும், மனரீதியிலும் துன்புறுத்தியுள்ளார்.
இதை அறிந்த மஜக மாவட்ட செயலாளர் ஜே.எம்.வசீம் அக்ரம் இதை அனைத்து கடைகளில் முறையாக சோதனை செய்ய வேண்டும் என்றும் அரசு தலையிட்டு தடுக்க வேண்டும் மேலும் சீனா முட்டைகள் இந்தியாவிற்குள் வருவதற்கு அனுமதிப்பவர்கள் மீது மத்தியஅரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இது இப்படியே தொடருமானால் மஜக சார்பில் அனைத்து கட்சி மற்றும் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும் நபரை தாக்கிய கடையின் உரிமையாளர் மீது உடனடியாக காவல்துறை கைது செய்யது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
(MJK IT-WING)
வேலூர் மாவட்டம்.
21.02.17