நாகை. ஏப்.30., நாகப்பட்டினம் E.G.S பிள்ளை கலை, அறிவியல் கல்லூரியின் 2016-2017 க்கான பட்டமளிப்பு விழா கல்லூரி ஆடிட்டோரியத்தில் கடந்த 30-04-2017 அன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், மஜக பொதுச் செயலாளருமான M.தமிமுன் அன்சாரி MA.,MLA., அவர்கள் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் கல்லுரியின் சேர்மன் ஜோதிமணி ஜி.எஸ்.பிள்ளை, செயலாளர் ஸ்ரீ.பரமேஸ்வரன், கல்லூரி முதல்வர் டாக்டர் நட்ராஜ் உள்ளிட்ட பேராசிரியர் பெருமக்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் பங்கெடுத்தனர். கல்லூரி நிர்வாகமும், பேராசிரயர்களும், மாணவ மாணவிகளும் மிகுந்த ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் இருந்ததால் உடல்நிலை சரியில்லாத சூழ்நிலையிலும் சட்டமன்ற உறுப்பினர் பங்கெடுத்து சிறப்பித்துதந்தது அணைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக கூறினர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING நாகை மாவட்டம் 30.04.2017
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
பி.ஆர்.பாண்டியன் அவர்களை சந்தித்த மஜக நிர்வாகிகள்!
மன்னார்குடி.ஏப்.29., விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் அய்யா பி.ஆர் பாண்டியன் அவர்களை கடந்த 229.04.2017 அன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அவரது இல்லத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் சந்தித்து நலம் விசாரித்தார். சில தினங்களுக்கு முன் நடந்த ரயில்மறியல் போராட்டத்தின் போது கலவரத்தை தூண்டிய காவல்துறையின் அடாவடி போக்குகள் குறித்தும் விசாரித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்களும், ஐக்கிய அரபு அமீரக செயலாளர் மதுக்கூர் அப்துல் காதர் அவர்களும், மத்திய சென்னை மூஸா அவர்களும் உடன் இருந்தனர். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்டம் 29-04-2017
மஜக மாநில பொருளாளர் மே தின வாழ்த்து !
1886 ல் சிக்காகோ நகரத்தில் மே மாதம் 4 ம் நாள் இனி எட்டு மணி நேர வேலை தான் செய்வோம் என தொழிலாளர்கள் எழுப்பிய உரிமை முழக்கம் அவர்களின் உயிர்களை பறிப்பதற்கு காரணமாக அமைந்தது. மனிதகுலம் செழித்து தழைப்பதற்கும், உயிரோட்டமாக இயங்குவதற்கும் உழைப்பாளிகளின் வியர்வையே மூலக்காரணம் என்று சொன்னால் மிகையாகாது. உண்ணும் உணவு தொடங்கி உடுத்தும் உடை வரை, வாழ்வு தொடங்கி மரணம் வரை மனிதகுலத்தின் அனைத்து தேவைகளுக்கும் உழைப்பாளிகளின் தயவே தேவைப்படுகிறது. உழைப்பின் வலிமை உணர்ந்து இனி தொழிலாளர்களை நசுக்காதீர்கள் என கூக்குரலிட்டு வைக்கோல் சந்தை கிளர்ச்சியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ஜார்ஜ், ஆல்பர்ட், அடால் ஃபிசர் மற்றும் ஆகஸ்ட் ஸ்பைஸ் உள்ளிட்ட நான்கு பெரும் தூக்கிலப்படுவதற்கு முன்பு கூறிய வார்த்தைகள் உழைப்பாளிகளின் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றுள்ளது. எங்கள் உயிர் பறிப்பது குறித்து எழும் அடக்குமுறை ஒலியை விட எங்கள் மரணத்தின் நிசப்தம் எதிர்காலத்தில் மிக வலிமையானதாக இருக்கும் என்றார்கள். இன்றைக்கு மே தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. உழைப்பவன் வியர்வை உலரும் முன் கூலியை கொடுத்துவிடுங்கள் என்றார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள். இவண் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது. மாநில பொருளாளர், மனிதநேய ஜனநாயக கட்சி 01.05.2017
கோவையில் எழுச்சியுடன் நடைபெற்ற மஜகவின் மே தின விழா…
கோவை.மே.01., கிணத்துக்கடவு பகுதி குறிச்சிபிரிவு (MJTS) பாரம்தூக்கும் சங்கத்தின் சார்பாக மே தின கொடியேற்று விழா சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் கோவை மாநகர் மாவட்ட (எம் ஜே டி எஸ்) செயலாளர் கு.சுதீர் தலைமையில், கோவை மாநகர் மாவட்ட துனை செயலாளர் டி எம் எஸ் அப்பாஸ் கொடியேற்றி சிறப்பித்தார். கோவை மாநகர மாவட்ட துனை செயலாளர் பி.எம்.ஆர்.ரபி அவர்கள் இனிப்பு வழங்கினார். இதில் பாரம் தூக்கும் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கினத்துக்கடவு பகுதி நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொன்டு மிக சிறப்பாக நிகழ்ச்சியை சிறப்பித்து தந்தார்கள்... தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. கோவை மாநகர் மாவட்டம் #MJK_IT_WING 01.05.2017
அதிராம்பட்டினத்தில் மஜக எழுச்சி பொதுக்கூட்டம்!
தஞ்சை.ஏப்.29., தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூர் கிளை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நேற்று 28-04-2017 வெள்ளிக்கிழமை மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் அதிரை பேரூந்து நிலையத்தில் மாவட்ட செயலாளர் வல்லம் அகமது கபீர் தலைமையில் நடைபெற்றது. நூருல் அமீன் ரஹ்மானி அவர்கள் நீதிபோதனை வழங்க நகர செயலாளர் முகம்மது செல்ல ராஜா வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட பொருளாளர் தஞ்சை ஜப்பார், அமீரக செயலாளர் மதுக்கூர் அப்துல் காதர், மாவட்ட நிர்வாகிகள், முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, மதுக்கூர் கிளைகளின் செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, மாநில துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், முன்னாள் மாநில அமைப்புச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, மாநில இளைஞர் அணி செயலாளர் ஷமீம் அஹமது உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்தினர். நிகழ்ச்சியினை குவைத் மண்டல செய்தி தொடர்பாளர் அப்துல் சமது தொகுத்து வழங்கினார். இறுதியாக நகர பொருளாளர் சாகுல் ஹமீது நன்றி உரை ஆற்றினார். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING தஞ்சை தெற்கு மாவட்டம் 28-04-2017