மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 08, 2021 கோவை சிறை முற்றுகை போராட்டத்தின் இறுதி கட்ட பரப்புரை பணிகளில் தமிழகம் முழுவதும் மஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு நிகழ்வாக தஞ்சாவூர் மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருலாளர் அப்துல்லாஹ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் அகமது கபிர் கலந்துகொண்டு போராட்டத்தின் இறுதி கட்ட பணிகள் குறித்து எடுத்துரைத்தார், மேலும் மாவட்டம் முழுவதும் வாகன பரப்புரையில் ஈடுபடுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதில் மாநகர மாவட்ட துணை செயலாளர் சேட்டு (எ) ஹபீப் ரஹ்மான், நகர செயலாளர் சாகுல் ஹமீது, மாநகர பொருளாளர் காமில், இஸ்லாமிய கலாச்சார பேரவையின் செயலாளர் ஜாகிர் உசேன், இளைஞரணி செயலாளர் சேக், அப்துல்லா வர்த்தக அணி செயலாளர் சாகுல் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #மஜக_தஞ்சை_மாநகர்_மாவட்டம்
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
ஈரோடு கிழக்கு மாவட்ட மஜக இளைஞரணி ஆலோசனை கூட்டம்!
மனிதநேய ஜனநாயக கட்சி ஈரோடு கிழக்கு மாவட்ட இளைஞர் அணியின் ஆலோசனை கூட்டம் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் திலீப் குமாா், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் பாபு ஷாஹின்சா, மாவட்ட செயலாளர் சபீக் அலி, மாநில செயற்குழு உறுப்பினர் இஹ்சானுல்லாஹ், ஆகியோர் பங்கேற்று ஜன 8 கோவை சிறை முற்றுகை போராட்டத்தில் இளைஞரணியின் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர். மேலும் வீடு தோறும் சென்று துண்டு பிரசுரம் மூலம் போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பது எனவும், திரளான மக்களை இந்த போராட்டத்தில் பங்கேற்க செய்ய வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. இதில் அக்ரஹார பகுதி செயலாளா் பொறியாளா் ஜாவித், இளைஞரணி உசேன், தினகரன், பூபதி, இப்ராஹிம், மா பாஷா, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongTermPrisnors தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #ஈரோடு_கிழக்கு_மாவட்டம் 27.12.2021
சிறுபான்மையினர் கடன் உதவி திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும்..! மஜக இளைஞரணி மாநில செயலாளர் கோரிக்கை.!
சிறுபான்மை ஆணையர் பீட்டர் அல்ஃபோன்ஸ் அவர்கள் தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் "சிறுபான்மை ஆணைய கலந்தாய்வு கூட்டம்" நடைப்பெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக இளைஞரணி மாநில செயலாளர் அசாருதீன் கலந்து கொண்டு மஜக சார்பாக சிறுபான்மையினருக்கு வழங்கும் கடனுதவி திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. கலந்தாய்வு நடந்த அவையிலேயே முதலமைச்சருடன் ஆலோசித்து ஒரு லட்சம் ரூபாய் கடன்களை எந்த ஆவணமுமின்றி வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஆணைய தலைவர் அவர்கள் வாக்குறுதி அளித்தார். மேலும் சிறுபான்மை இளைஞர்களுக்கு சங்கம் அமைப்பது தொடர்பாகவும் கோரிக்கை வழங்கப்பட்டது. இதில் மருத்துவ அணி மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான், மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர் அஹமது ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #மத்திய_சென்னை 28.12.2021
கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருடன்! மஜக நிர்வாகிகள் சந்திப்பு!
கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், அவர்களை 27.12.2021 அன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், அவர்கள் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் முஜீப் ரகுமான், அமீர்கான், ஆகியோர் சந்தித்தனர். இச்ந்திப்பில் சிறைவாசிகள் விடுதலைக்காக ஜனவரி 8 அன்று மஜக முன்னெடுக்கும் கோவை சிறைச்சாலை முற்றுகை போராட்டம் குறித்தும், தொகுதி சார்ந்த மக்கள் நல கோரிக்கைகள் குறித்தும் பேசப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #கன்னியாகுமரி_மாவட்டம் 27-12-2021
சுப.உதயக்குமாருடன் மஜக தலைமை நிர்வாகிகள் சந்திப்பு..!
பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராளியுமான சுப.உதயக்குமார் அவர்களை 25.12.2021 அன்று தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், இணை பொதுச்செயலாளர் J.S.ரிஃபாயி, துணை பொதுச்செயலாளர் N.A.தைமிய்யா ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பில் சிறைவாசிகள் விடுதலைக்காக ஜனவரி 8 அன்று மஜக முன்னெடுக்கும் கோவை சிறைச்சாலை முற்றுகை போராட்டம் குறித்தும், போராட்டத்திற்கு மனித உரிமை ஆர்வலர்களை அழைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த சந்திப்பில் மாநில துணைச் செயலாளர்கள் காயல் சாகுல் ஹமீது, நாகை முபாரக் ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தூத்துக்குடி_புறநகர்_மாவட்டம் 25-12-2021