மஜக தஞ்சை மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம்..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 08, 2021 கோவை சிறை முற்றுகை போராட்டத்தின் இறுதி கட்ட பரப்புரை பணிகளில் தமிழகம் முழுவதும் மஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு நிகழ்வாக தஞ்சாவூர் மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருலாளர் அப்துல்லாஹ் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் அகமது கபிர் கலந்துகொண்டு போராட்டத்தின் இறுதி கட்ட பணிகள் குறித்து எடுத்துரைத்தார், மேலும் மாவட்டம் முழுவதும் வாகன பரப்புரையில் ஈடுபடுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இதில் மாநகர மாவட்ட துணை செயலாளர் சேட்டு (எ) ஹபீப் ரஹ்மான், நகர செயலாளர் சாகுல் ஹமீது, மாநகர பொருளாளர் காமில், இஸ்லாமிய கலாச்சார பேரவையின் செயலாளர் ஜாகிர் உசேன், இளைஞரணி செயலாளர் சேக், அப்துல்லா வர்த்தக அணி செயலாளர் சாகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மஜக_தஞ்சை_மாநகர்_மாவட்டம்