
சென்னை.பிப்.03., தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சென்னை மாநகராட்சியின் 94-வது வார்டில் மாவட்ட துணைச் செயலாளர் பக்கீர் மைதீன் போட்டியிடுகின்றார்.
இன்று (03.02.2022) மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வில்லிவாக்கம் ஷாகுல் ஹமீது அவர்களின் தலைமையில், வேட்பாளர் பக்கீர் மைதீன் வேட்புமனுவை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.
நிகழ்வில் மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், மத்திய சென்னை மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் யாசின், பகுதி, கிளை நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மத்திய_சென்னை_மேற்கு_மாவட்டம
03.02.2022