சௌதி அரேபியா ஜித்தா மண்டலம் மதினா கிளை இஸ்லாமிய கலாச்சார பேரவையின் ஆலோசனைகூட்டம் கடந்த 24-03-2017 வெள்ளிக் கிழைமையன்று நடைபைற்றது. சகோதரர் ஆரிப் சுல்தான் அவர்களின் தலைமையில் கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. #தீர்மானம்_01 இஸ்லாமிய கலாச்சார பேரவை மதினா மாநகர கிளை ஜித்தா மண்டலத்தின் நிர்வாக்கத்தின் கீழ் செயல்படுவதாக நிறைவேற்றப்பட்டது. #தீர்மானம்_02 மதினா மாநகரம் கீழ் பல்வேறு கிளைகள் திறப்பதற்க்கு தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெற வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #தீர்மானம்_03 வாரந்தோரும் சிறப்பு பயான் நிகழ்ச்சிகள் நடத்துவது என நிறைவேற்றப்பட்டது. இறுதியாக கிளை செயலாளர் #முஹம்மது_ஜலில் அவர்கள் நன்றியுரை கூற நிகழ்வு நிறைவுப்பெற்றது. இவண் ; தகவல் தொழில் நூட்பஅணி, இஸ்லாமிய கலாச்சார பேரவை, ஜித்தா மண்டலம். #IT_WING_JIDDAH
மனிதநேய கலாச்சார பேரவை
மனிதநேய கலாச்சார பேரவை
IKP நியமன அறிவிப்பு…
#ஜித்தா_மண்டலம்_இஸ்லாமிய_கலாச்சார_பேரவையின்_கீழ் #மதினா_மாநகரம்_கிளை_உதயமானது (அல்ஹம்துலில்லாஹ்) அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்.... கடந்த 24-03-2017 வெள்ளிக் கிழைமையன்று புதிய கிளை உதயமானது. புனித மதினா மாநகர கிளை நிர்வாகிகள் பட்டியல்: #கிளை_செயலாளர்: முஹம்மது ஜலில் திருமுல்லைவாசல் (0598147973) #பொருளாளர் : மு.மீரா நைனா காயல்பட்டினம் (0554995128 ) #ஒருங்கினைப்பாளர் : மு.அ.சுல்தானுல்ஆரிபின் தோப்புதுறை (0542890350) #துணைச்_செயலாளர்கள்: 01).மு.மன்சூர் தேவிப்பட்டினம் (0536992566) 02).மு.சாதிக் ஆம்பூர் (0581697826) இவண், என்.ஏ. தைமிய்யா ஒருங்கிணைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) 03/04/2017
குவைத் மண்டலம் மஜக இரண்டாம் ஆண்டு துவக்க விழா அழைப்பு…
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் 14/04/2017 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு முர்காப் ராஜ்தானி உணவகத்தில் நடைபெறுகிறது. மனிதநேய சொந்தங்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க அன்போடு அழைக்கிறது. மனிதநேய கலாச்சார பேரவை மனிதநேய ஜனநாயக கட்சி MJK-IT-WING குவைத் மண்டலம் 55278478 - 55260018 - 60338005 - 65510446 E-mail: mjkkuwait@gmail.com Web : www.mjkparty.com
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை நிர்வாகிகள் நியமனம்…
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் மண்டல து.செயலாளராக சகோ. நெல்லை அப்துல் வாஹிது அவர்களும், மக்கள் தொடர்பு செயலாளராக (PRO) சகோ. பொதக்குடி சதக்கத்துல்லாஹ் அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளது. மண்டல, கிளை நிர்வாகிகள் மற்றும் மனிதநேய சொந்தங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தறுமாறு கேட்டு கொள்ளபடுகிறது. புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் பணி சிறக்க வல்ல ரஹ்மான் உதவி செய்வானாக. மனிதநேய கலாச்சார பேரவை மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING குவைத் மண்டலம் 55278478 - 55260018 - 60338005 E-mail: mjkkuwait@gmail.com
பஹ்ரைன் மண்டல மாதாந்திர கூட்டம்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் வளைகுடா பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவையின் பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆலோசனை கூட்டம் அலுவலகத்தில் 10:03:2017 மாலை 5 மணிக்கு மண்டல செயலாளர் சகோதரர் நாச்சிகுளம் ஜான் முகம்மது அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மஜக வின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தையும், மாநில பொதுச்செயலாளர் சகோதரர் தமீமுன் அன்சாரி.MLA அவர்களின் சிங்கப்பூர் விழா குறித்தும் மண்டல துணை செயலாளர் வல்லம் ரியாஸ் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. இதில் மண்டல நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பங்குகொண்டனர். புதிய பாதை,புதிய பணத்தின் தொடக்கமாக இருக்கும் ம ஜ வின் செயல்பாட்டால் சென்னை, இராமநாதபுரம், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த எழுச்சிமிகு இளைஞர்கள் தங்களை ம ஜ க வில் இணைத்துக்கொண்டர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய கலாச்சாரப் பேரவை #MJK_IT_WING பஹ்ரைன் மண்டலம்