யூ.ஏ.இ.ஜூன்.20., இன்று அல் அய்ன் மண்டலத்திற்குட்பட்ட மரக்கானியாவில் மனிதநேய கலாச்சார பேரவையின் புதிய கிளை துவங்கப்பட்டது. இந்நிகழ்வில் அமீரக ஆலோசகர் J.சேக்தாவுது, அல் அய்ன் மண்டல செயலாளர் S.முகம்மது இம்ரான், பொருளாளர் பூதமங்களம் ஜாகிர் உசேன், துணை செயலாளர் இலந்தங்குடி M.யூசுப் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இன்ஷா அல்லாஹ் விரைவில் கிளை நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும். மண்டல துணை செயலாளர் அறந்தாங்கி அப்துல்லா அவர்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை செய்திருந்தார். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய கலாச்சார பேரவை. ஐக்கிய அரபு அமீரகம். #MKP_IT_WING 20.06.2017
மனிதநேய கலாச்சார பேரவை
மனிதநேய கலாச்சார பேரவை
அஜ்மானில் செயற்குழுகூட்டம் மற்றும் இப்தார் நிகழ்ச்சி…
யூஎயி.ஜூன்.12., ஐக்கிய அரபு அமீரகம் அஜ்மான் மண்டல மனிதநேய கலாச்சார பேரவையின் செயற்குழு கூட்டம் கடந்த 09/06/2017 வெள்ளிகிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு MKP அமீரக செயலாளர் மதுக்கூர் S.அப்துல் காதர் அவர்கள் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மண்டல செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள், பித்ரா மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை உள்ளிட்டவைகள் விவாதிப்பட்டன. கூட்டத்தில் மண்டல பொருளாளராக சகோதரர் கடியாச்சேரி S.அப்துல் மாலிக் அவர்கள் தேர்தெடுக்கப்பட்டார்கள். அஜ்மான் மண்டல பொருப்பாளராக அமீரக தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளர் Y.M.ஜியாவுல் ஹக் அவர்கள் நியமிக்கப்பட்டார். மண்டல செயலாளர் செல்லப்பா அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது. பின்னர் மண்டலத்தின் சார்பாக இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் அமீரக துணை செயலாளர் M.அபுல் ஹசன், மண்டல நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய கலாச்சார பேரவை. ஐக்கிய அரபு அமீரகம். #MJK_IT_WING
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை ஆலோசணைக் கூட்டம்.
குவைத்.ஜூன்.12., குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை ஆலோசணைக் கூட்டம் கடந்த 09/06/2017 வெள்ளிக்கிழமை இஃப்தாருக்கு பின் சல்வாவில் மண்டல செயலாளர் சகோ.முத்துகாபப்பட்டி ஹாஜா மைதீன் அவர்கள் தலைமமையில் நடைபெற்றது. இதில் இவ்வருட ரமலான் மாதத்தின் அடுத்த கட்ட நிகழ்ச்சி நடத்துவது குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மண்டல, கிளை நிர்வாகிகள் மற்றும் மனிதநேய சொந்தங்கள் கலந்து கொண்டனர். தகவல்; மனிதநேய கலாச்சார பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி. குவைத் மண்டலம். #MJK_IT_WING 55278478 - 60338005 - 65510446.
கோவை மாவட்ட மஜக நிர்வாகக்குழு! மாநில நிர்வாகிகள் பங்கேற்பு!!
கோவை.மே.17., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநில செயலாளர் A.K.சுல்தான் அமீர், மாநில துணை செயலாளர் T.K.அப்துல் பஷீர், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான் ஆகியோர் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர். இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ATR பதுருதீன், மாவட்ட துணைசெயலாளர்கள் TMS அப்பாஸ், சிங்கை சுலைமான், பாருக், ரபீக், அமீர் அப்பாஸ், பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜா ஜெமீஷா, மாவட்ட தொழிற் சங்க செயலாளர் சுதீர், மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல், இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை மாவட்ட செயலாளர் ஹனீபா ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 1: பொள்ளாச்சி நகர கூடுதல் பொருப்பாளராக ABT பாருக் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். 2: 15 நாளுக்கு ஒரு முறை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் கூட்டுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 3: கோவைமாவட்ட அலுவலகம் விரைவில் பிரம்மாண்டமாக திறக்கப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம். 16.05.2017
ரியாத் மண்டலத்தில் IKP சார்பாக மார்க்க விளக்க பொது நிகழ்ச்சி …
சவுதி அரோபியா.ஏப்.21., ரியாத் மண்டலம் இஸ்லாமிய கலாச்சார பேரவையின் சார்பாக இன்று 21/04/2017 காலை 08.30 மணியலவில் நடைபொற்ற மார்க்க விளக்க பொது நிகழ்ச்சி IKPஇன் மண்டல செயலாளர் A.ஹாஜா கமருதீன் தலைமையில், மண்டல செய்தி தொடர்பாளர் A.அவ்லியா முகம்மது வரவேற்புரை ஆற்றினார். ரியாத் அல் சமால்லு தாஃவா சென்டர், இஸ்லாமிய அழைப்பாளர்.சகோதரர் மெளலவி A.H.முஹம்மது சபருல்லாஹ் சிறப்புரை ஆற்றினார்கள். மண்டல நிர்வாகிகள் ஹாஜா மைதீன் , கனி , சிக்கந்தர் , ஜாகிர் உசேன் , நிவாஜ், காதர் சாகிப், நைனார் முஹம்மது ஆகியோருடன் கிளை நிர்வாகிகள் அனைத்து சகோதரர்களும் கலந்து கொண்டனர். இறுதியாக IKP மண்டல ஒருங்கினைப்பாளர் J.சாதிக் பாட்ஷா நன்றியுரை ஆற்றினார். இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் IKP ரியாத் மண்டலம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். தகவல் :- தகவல் தொழில்நுட்ப அணி, இஸ்லாமிய கலாச்சார பேரவை, #IKP_IT_Wing ரியாத் மண்டலம். 21.04.2017