புருனே. ஆக.22., தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றான புருனே (தாருஸ்ஸலாம்) நாட்டுக்கு இன்று மதியம் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர் அவர்களும் வருகை தந்தனர். கோலாலம்பூர் வழியாக வருகை தந்த அவர்களுக்கு புருனே விமான நிலையத்தில் புருனே மஜக சகோதரர்கள் மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) சார்பில் வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து 5 நாட்கள் புருனேயில் தங்கி, இந்திய சகோதரர்கள் அளிக்கும் தேனீர் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். தமிழக அரசியல் பரபரப்பாக இருக்கும் சூழலில் ,அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் புருனேயில் இருக்கும் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்களுடன் அலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். தொடர்புக்கு: 8906959 (தாஹா) 8366160 (ஜாஹிர் ஹுசேன்) தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING புருனை மண்டலம் 22_08_17
மனிதநேய கலாச்சார பேரவை
மனிதநேய கலாச்சார பேரவை
மஜக கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்..!
கோவை.ஆக.09., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை சுலைமான், இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அனீபா, இளைஞரணி மாவட்ட செயலாளர் பைசல், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் பாதுஷா, வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆகஸ்ட் 13.08.17அன்று பொள்ளாச்சி நகரத்தின் சார்பில் நடைபெறும் கொடியேற்று விழாவில் அதிகமான மக்கள் கலந்துகொள்வது என தீர்மானிக்கப்பட்டது, ஆகஸ்ட்15. 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 71 யூனிட் இரத்ததானம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது, ஆகஸ்ட்15 அன்று கோவை மாவட்ட மருத்துவ அணி மற்றும் இளைஞர் அணி சார்பில் நடைபெறும் மாபெரும் மருத்துவமுகாமை சிறப்பாக நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. தகவல்.; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING கோவை_மாநகர்_மாவட்டம் 08.08.17
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை மஹபுல்லா கிளை நடத்திய சுதந்திர தின கருத்தரங்கம்.
குவைத்.ஜூலை.31., குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை மஹபுல்லா கிளையின் சார்பாக இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு "சுதந்திர இந்தியாவின் அவல நிலை" கருத்தரங்கம் 28/07/2017 வெள்ளிக் கிழமை அன்று மஹபுல்லாவில் மண்டல து.செயளாலர் சகோ. நெல்லை வாஹிது அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக கிளை து.செயளாலர் சகோ. ஏர்வாடி ஹசன் இபுறாஹிம் அவர்கள் நீதி போதனை நிகழ்த்தி துவைக்கி வைக்க. கிளை பொருளாளர் சகோ. கோட்டைபட்டினம் ஜாபர் அலி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகிக்க. மண்டல செயளாலர் சகோ. முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன் அவர்கள் இன்றைய தமிழகத்தின் அரசியல் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து மண்டல ஆலோசகர் சகோ. முசாவுதீன் அவர்கள் மீண்டும் வேண்டும் சுதந்திர போராட்டம் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். இறுதியாக கிளை செயளாலர் சகோ. கோட்டைபட்டினம் அப்துல் காதர் அவர்கள் நன்றியுரை கூறினார். இதில் மனிதநேய சொந்தங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். தகவல்; மனிதநேய கலாச்சார பேரவை (மனிதநேய ஜனநாயக கட்சி) #MJK_IT_WING குவைத் மண்டலம். 55278478-60338005-65510446.
குவைத் மண்டலம் MKP மஹபுல்லா கிளை நடத்தும் “சுதந்திர இந்தியாவின் அவல நிலை” சுதந்திர தின சிறப்பு கருத்தரங்கம்.
குவைத்.ஜூலை.26: குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை மஹபுல்லா கிளை சார்பில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு "சுதந்திர இந்தியாவின் அவல நிலை" என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் எதிர் வரும் 28/07/2017 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கத்தா - 2, இஸாரா - 229, பில்டிங் -242 ல் சிறப்பாக நடைபெற உள்ளது. சுதந்திர உணர்வுள்ள மனிதநேய சொந்தங்களே கருத்தரங்கில் சங்கமித்து சாட்சி கூறுவோம். "மதத்தால் இஸ்லாமியன் மொழியால் தமிழன் நாட்டால் இந்தியன்" - போராடி பெற்ற சுதந்திரத்தில் நாம் ஆற்றிய பங்கை உலகிற்கு உணர்த்துவோம்" அன்புடன் அழைக்கிறது. மனிதநேய கலாச்சார பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING குவைத் மண்டலம். 55278478 - 60338005 - 65510446.
ஈகையும், அன்பும் ஓங்கட்டும் ! மஜக ரமலான் வாழ்த்து !
( மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் வாழ்த்துச் செய்தி) முஸ்லிம்களின் இருபெரும் பண்டிகைகளில் ஒன்றான ஈதுல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாள் உலகம் எங்கும் இருவேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது . சூரிய உதயத்திற்கு முன்பு தொடங்கி , சூரியன் மறையும் வரை 30 நாட்கள் நோன்பிருந்து , அதிகமாக இறைவழிபாடுகளில் ஈடுபட்டு, தேடி வரும் ஏழைகளுக்கு வாரி வழங்கி ரமலான் மாதத்தின் நிறைவாக நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகிறது . உள்ளங்களில் ஆன்மீக எழுச்சி, செயல்களில் பயிற்சியும் , அணுகுமுறைகளில் பயிற்சியும் ரமலான் தரும் பரிசுகளாகும் . இந்நன்னாளில் சகோதர சமுதாய மக்களோடு அன்பையும் , விருந்தோம்பலையும் பகிர்ந்துக் கொண்டு , நல்லிணக்கம் மேலும் , மேலும் வளர பாடுபட உறுதியேற்போம் . உலகமெங்கும் அன்பும் , அமைதியும் , மானுட ஒற்றுமையும் தழைத்தோங்கவும் , வறுமையும் , துயரமும் மறைந்து மகிழ்ச்சி பெருகவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம் . அனைவருக்கும் ஈதுல் ஃபித்ர் எனும் ரமலான் நல்வாழ்த்துக்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் . M. தமிமுன் அன்சாரி