திருச்சி:ஆக:02., காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசையும்,அதற்குத் துணைபோகும் ஒன்றிய அரசையும் கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வானொலி நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் அந்தோணிராஜ், அவர்கள் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்ட செயலாளர் பேரா.மைதீன், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி கண்டன முழக்கங்களை எழுப்பினார். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட மஜக-வினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது, பின்னர் வானொலி நிலையம் வாயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் சையது முஸ்தபா, சேக் அப்துல்லா நிர்வாகிகள் அன்வர், ஆரிப், சையது, சேட், மைதீன், வாஹித், அப்துல்லா, மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருச்சி_மாவட்டம் 01.08.2021
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து மஜகவின் ஆர்ப்பாட்ட முழக்கங்கள்…!
1) கண்டிக்கின்றோம்.. கண்டிக்கின்றோம்.. மேகதாது மலையருகில்... அணை கட்ட முயற்சிக்கும்.... கர்நாடக அரசை... வன்மையாக கண்டிக்கிறோம். 2) காவிரி எங்கள் வாழ்வுரிமை.. அது தென்னகத்தின் பொதுவுடமை.. தடுக்காதே.. தடுக்காதே.. நதியுரிமையை தடுக்காதே! 3) ஒன்றிய அரசே.. ஒன்றிய அரசே.. துணை போகாதே.. துணை போகாதே.. கர்நாடக அரசுக்கு... துணை போகாதே.. துணை போகாதே.. 4) தென்னிந்தியாவின் பசியாற்றும்.. டெல்டாவின் வயல்வெளியை.. பாலைவனம் ஆக்காதே..! 5) காவிரியில் தாகம் தணிக்கும்.. தமிழக மக்களை வஞ்சிக்காதே..! 6) செயல்படுத்து.. செயல்படுத்து.. காவிரி மேலாண்மை ஆணையத்தை... செயல்படுத்து.. செயல்படுத்து.. 7) காப்போம்.. காப்போம்.. விவசாயிகளின் உரிமைகளை... பாதுகாப்போம்! பாதுகாப்போம்!! 8) காப்போம்.. காப்போம்.. காவிரி ஆற்றின் உரிமைகளை... பாதுகாப்போம்! பாதுகாப்போம்!! 9) காவிரி எங்கள் ரத்த ஓட்டம்.. அதை தடுத்து நிறுத்த விடமாட்டோம்! 10) போராட்டம்.. இது போராட்டம்.. மஜக முன்னெடுக்கும்... உரிமை காப்பு போராட்டம்!
விலைவாசி உயர்வை கண்டித்து பண்டாரவாடையில் மஜக ஆர்ப்பாட்டம்!
ஜூலை.18, இன்று பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாத ஒன்றிய அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி பாபநாசம் ஒன்றியம் சார்பில் பண்டாரவாடையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்க மருத்துவ சேவை அணியின் மாநில துணைச் செயலாளர் முஹம்மது மஃரூப், ராஜகிரி ஊராட்சிமன்ற தலைவர் முபாரக் ஹூசைன், ராஜகிரி பண்டாரவாடை வணிகர் சங்க தலைவர் அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர். இதில் முக கவசங்களுடன் ராஜகிரி - பண்டாரவாடை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மஜக ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்பட திரளான மஜகவினர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_வடக்கு_மாவட்டம்.
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து மஜகவினர் மனு…!
வேலூர்.ஜூலை.18., குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.அமலுவிஜயன் MLA., அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் குடியாத்தம் நகர செயலாளர் எஸ்.அனிஸ் அவர்கள் சந்தித்து மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து மனு அளித்தார். குடியாத்தம் நகரின் 8-வது வார்டு அசேன் தெரு, சக்தி நகர், MBS நகர், பகுதிகளில் மக்களின் முக்கிய கோரிக்கையாக விடுப்பட்ட சாலை வசதிகள், கழிவு நீர் கால்வாய்கள் சீரமைப்பு புதிய மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய கோரிக்கை மனு அவரிடம் அளிக்கப்பட்டது. இதை பெற்றுக்கொண்டவர் அனைத்து கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். இச்சந்திப்பில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் V.முபாரக் அஹ்மத், மஜக நகர துணை செயலாளர் A.S.கவுஸ் பாஷா, நகர மருத்துவ சேவை அணி நிர்வாகிகள் சாதிக் பாஷா, ரஹ்மான், மற்றும் கபீர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #வேலூர்_மாவட்டம் 18.07.2021
மேட்டுப்பாளையத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மஜகவினர் நூதன ஆர்ப்பாட்டம்!
கோவை வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மேட்டுப்பாளையத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் R.முஹம்மது அப்பாஸ் தலைமையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் M.சுல்தான், தலைமை செயற்குழு உறுப்பினர் A.முஹம்மது நிவாஸ் மாவட்ட துணைச் செயலாளர்கள் M.காஜாமைதீன் R.யாசர் அரபாத் S.உமர் பாரூக் A.ஷேக்மைதீன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் H.தொளபீக், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் மகேந்திரன், SMR பாரி, அன்னூர் ரியாஸ், ரமீஜ்ராஜா, சதாம் உசேன், சபீக், சேக், உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_வடக்கு_மாவட்டம் 07.07.2021 https://www.facebook.com/700424783390633/posts/3562982177134865/