சென்னை.ஏப்.28., ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை தகர்க்கும் நீட் (NEET) தேர்வை ரத்து செய்யக்கோரி நாளை 29.04.2017 சனிக்கிழமை காலை 10மணிக்கு சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டமும், சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் மாலை 4மணியாளவிலும் மாணவர் இந்தியா மற்றும் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டங்கள் நடைபெற உள்ளது. தகவல் ; ஊடக பிரிவு மாணவர் இந்தியா 28.04.2017
மாணவர் இந்தியா
மாணவர் இந்தியா
காயிதே மில்லத் ஊடக படிப்பு தொடக்க விழாவில் மாணவர் இந்தியா..!
சென்னை.ஏப்.24., காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பாக QIAMS ஊடகப் படிப்பு தொடக்க விழா சென்னை ஹயாத் ரெஜென்ஸி ஹோட்டலில் நடைப்பெற்றது. ஊடகத்துறையில் ஒர் உண்மை நிலையை கொண்டு வர அறக்கட்டளையின் செயலாளர் தாவூத் மியாகன் அவர்களின் முயற்சி பாராட்டத்திற்குரியது. சிறுபான்மை மற்றும் தலித் சமுதாய மக்கள் நிச்சயம் ஊடகத்துறையில் பணியாற்ற வேண்டும் என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, பத்திரிக்கை ஆசிரியர்கள் நக்கீரன் கோபால், ஞானி உள்ளிட்டோர் வலியுறுத்தி உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன், மாநில பொருளாளர் ஜாவித் ஜாஃபர் ஆகியோர் பங்கேற்றார்கள். தகவல் ; மாணவர் இந்தியா ஊடக பிரிவு, சென்னை. 24.04.2017
திருப்பூர் மஜக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..! மாநில செயலாளர் பங்கேற்ப்பு..!!
திருப்பூர்.ஏப்.20., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் J.பஷீர் அவர்களின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில செயலாளர் A.K.சுல்தான் அமீர் அவர்கள், மாநில பேச்சாளர் ஹைதர் அலி, மாநில செயற்குழு உறுப்பினர் P.M.இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக A.T.R.பதுர்தீன் அவர்கள் கலந்து கொண்டார்கள். ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. தொழிலில் ஏற்பட்ட நலிவின் காரணமாக கட்சி மாவட்ட துணை செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக கூறிய கண்ணன் அவர்களிடம். தொழில் பாதிப்பு ஏற்படாமல் கட்சி பணியாற்றி சமூகத்திற்கு பணியாற்ற மாநில செயலாளர் சுல்தான் அவர்கள் அறிவுறித்தினார்கள். இதையடுத்து ராஜினாமா முடிவை திரும்ப பெற்று பொறுப்பில் இருந்து பணியாற்றுவதாக கண்ணன் அவர்கள் உறுதியளித்தார். நிர்வாகிகள் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 1.தற்போது இருக்கும் நிர்வாகம் கட்சி பணியில் மிகுந்த வீரியத்தோடும் சிறப்பாகவும் செயல்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. 2.இனி தொடர்ந்து மாதம் 20.முதல் 28ம் தேதிக்குள் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 3.வரும் ஞாயிற்றுக்கிழமை 23.4.2017 அன்று மாலை மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான எம்.தமீமுன் அன்சாரி MLA அவர்களை அழைத்து திருப்பூர்
மாணவர் இந்தியா – கோடை கால திறன் மேம்பாடு சிறப்பு முகாம்
மாணவர் சமுதாயத்தை அறிவுத்திறன் சார்ந்த மாணவர்களாக உருவாக்குவதே மாணவர் இந்தியாவின் குறிக்கோளாகும் கண் முன்னே நடக்கும் சமூக அவலங்களை கைகட்டி வேடிக்கை பார்ப்பது தான் நாம் செய்ய வேண்டிய செயலா? Facebook , What's App - ல் கருத்து சொல்வது மட்டும் தான் நமது சமூக பங்களிப்பா? நாளொரு மேனியும், பொழுதோடு வண்ணமுமாக அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்தை பாதுகாக்க நாம் என்ன செய்ய போகிறோம்? சினிமா பார்ப்பது, கிரிக்கெட் விளையாடுவது, நண்பர்களுடன் ஊர் சுற்றவது இது தான் இளைஞர்களின் இன்றிமையாத பணியா? இவற்றுக்கெல்லாம் தீர்வு காண மாணவர் இந்தியா அன்போடு அழைக்கிறது. இரண்டு நாள் முழுநேர பயற்சி முகாம் 2017 மே 13,14 சனி, ஞாயிறு ஆகிய தினங்களில், காலை 10 மணி முதல் சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரைச் சாலையில் { ECR ரோடு } நடைபெற உள்ளது. மாணவர் இந்தியா நடத்தும் திறன் மேம்பாடு கோடை கால பயற்சி முகாமிற்கு சமுதாய தலைவர்கள், கல்வியாளர்கள், பல்வேறு துறைச் சார்ந்த அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், சாதனையாளர்கள், கலைத்துறையினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் பயற்சி வழங்குவார்கள். கல்லூரி மாணவர்கள் மட்டும் பட்டதாரி மாணவர்கள் மட்டுமே அனுமதி. இம்முகாமில் பங்கேற்பவர்களின் பதிவு கட்டணம்
திண்டுக்கல் மாவட்ட மஜக-வின் சார்பாக SP அலுவலகம் முற்றுகை போராட்டம்…
திண்டுக்கல். ஏப்.17., இன்று காலை 11-மணியலவில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, பிலாத்து கிராம மக்களின் அமைதியை சீர்குலைத்து பெண்களை கேலிக்கூத்து செய்து வரும் ஆண்டிகுளம் ஊரை சேர்ந்த முருகேசன் என்பவர் நாகலெட்சுமி என்ற பெண்ணிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதை வடமதுரை காவல் நிலையத்தில் ஊர் பொது மக்கள் சார்பாக புகார்அளிதனர், எந்த பலனும் இல்லாத நிலையில் திண்டுக்கல் மாவட்ட SP திரு.சரவணன் அவர்கள் கவனத்திற்கு கொண்டு வந்துனர். இவை அனைத்தையும் கண்டுகொள்ளாமல், நீதிக்கு புறம்பான செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் காவலர்களையும், அதற்கு உறுதுணையாகவும், தொடர்ச்சியாக ஒருதலை பட்சமாக செயல்பட்டு வரும் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்கானிப்பாளர். திரு.சரவணன் அவர்களை கண்டித்து SP அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது . இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா தலமையில், மாவட்ட பொருலாளர் U.மரைக்காயர் சேட் முன்னிலையில், மாநில இணை பொதுசெயலாளர் K.M.முகம்மது மைதீன் உலவி மற்றும் மாநில துணை செயலாளர் திண்டுக்கல் M.அன்சாரி ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். உடன் மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் பழனி சாந்து முகம்மது, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர்