திருவாரூர்.ஆக.12., அத்திக்கடைக்கு #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) கத்தார் மண்டல நிர்வாகி செய்யது பாருக் இல்ல திருமணத்திற்கு வருகை தந்த மஜக பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் திருவாரூரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது... காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை காலம் தொடங்கவில்லை. ஆனால், கர்நாடகா மற்றும் கேரளாவில் கடும் மழை பெய்வதால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது கடலில் தேவைக்கு மீறி ஆற்று நீர் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்கும் வகையில் காவிரியின் கிளை ஆறுகள் அனைத்திலும் தடுப்பணைகளை போர் கால அடிப்படையில் கட்ட தமிழக அரசு முன் வரவேண்டும். அது போல தஞ்சை, நாகை, திருவாருர், கடலூர் மாவட்டங்களில் இரண்டாம் கட்டமாக குடிமராமத்து பணிகளை விரிவுப்படுத்த வேண்டும். அனைத்து ஆறு, கால்வாய், ஏரி, குளங்களை மழை காலத்திற்கு முன்பே தூர் வாரினால் தான் , அது விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பயனுள்ளதாக இருக்கும் நாகப்பட்டினம், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்திய மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு நிறைவேற்றியுள்ள சட்டம் கடுமையானது. எனவே அச் சட்டத்தால் தமிழக மீனவர்கள்
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
முதல் கட்டமாக 10 லட்சம் ரூபாய்க்கு கேரளாவுக்கு, மஜக சார்பில் நிவாரண உதவிகள்! மஜக செயற்குழுவில் முடிவு!
தென்காசி.ஆக.11., #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் 5வது தலைமை செயற்குழு கூட்டம் நெல்லை மாவட்டம் தென்காசியில் எழுச்சியோடு நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர்களை வரவேற்று வரவேற்ப்பு வளைவுகளும், கொடிகளும் அமைக்கப்பட்டு, சுவரொட்டிகளும். காலை 11 மணியளவில் வருகை பதிவு துவங்கியது, மாநில செயலாளர் N.A.தைமியா தலைமையில் தொண்டர் அணியினர் அழைப்பிதழை சரிபார்த்து வருகை பதிவு செய்தனர். இச்செயற்குழுவுக்கு அவைத் தலைவர் நாசர் உமரீ தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் இணைப் பொதுச் செயலாளர் மைதீன் உலவி அவர்கள் நீதிபோதனை நிகழ்த்தினார் . அவரை தொடர்ந்து தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் J.S.ரிபாயி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அவரை தொடர்ந்து செயற்குழுவின் நோக்கம் குறித்து பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் நோக்க உரையாற்றி கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினார். அதனை தொடர்ந்து மாவட்ட செயல்பாடுகள் குறித்து கருத்தாய்வை தலைமை நிர்வாக குழு உறுப்பினர் AS. அலாவுதீன் அவர்கள் வழிநடத்தினார். இதில் ஒவ்வொரு மாவட்டத்தின் சார்பில் ஓராண்டு பணிகள் அறிக்கைகளாக தாக்கல் செய்யப்பட்டது. மேலும் தலைமை வளர்ச்சி குறித்து அவர்களின் ஆலோசனைகளும் பெறப்பட்டது. அதன்படி எதிர்வரும் செப்டம்பர் 01 முதல் அக்டோபர் 31 வரை இரு மாதங்களுக்கு தீவிர உறுப்பினர் சேர்ப்பு நடத்துவது எனவும், அதன் வழியாக கட்சிக்கு
கலைஞர் இறுதி சடங்கில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பங்கேற்றார்..!
சென்னை.ஆக.08., இந்தியாவின் முதுபெரும் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் இறுதி ஊர்வலம் சென்னை இராஜாஜி ஹாலிலிருந்து லட்சக்கணக்கான மக்களின் கண்ணீர் மழைக்கிடையே சென்னை மெரீனா கடற்கரைக்கு வந்து சேர்ந்தது, அங்கே அந்திசாயும் நேரத்தில் கலைஞரின் உடல் சந்தனப்பெட்டியில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் முன்னாள் பிரதமர் தேவகெளடா, .கவர்னர் புரோஹித், பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் , ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, திமுக மூத்த தலைவர் பேரா. அன்பழகன், தி.க.தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மதிமுக தலைவர் வைகோ, மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA . விசிக தலைவர் தொல்.திருமாவளவன், இ.ந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன், பாமக தலைவர் ஜி.கே.மணி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசு, அக்கட்சியை சேர்ந்த Ev KS இளங்கோவன், தங்கபாலு, குஷ்பு, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA ., கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்ட திரளான தலைவர்களும் பங்கேற்றனர். கலைஞரின் குடும்ப
தமிழ் இனத்தின் போராளி மறைந்துவிட்டார்! கலைஞர் மறைவு குறித்து மஜக இரங்கல்!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் இரங்கல் செய்தி) பெரியாரின் பெருந்தொண்டராய்; பேரறிஞர் அண்ணாவின் அன்பு தம்பியாய்; தமிழ் இனத்தின் போர் குரலாய் 80 ஆண்டு கால பொதுவாழ்வுக்கு உரியவராய் திகழ்ந்த கலைஞர்; இன்று முதுமை காரணமாக தனது 95 ஆம் வயதில் மரணமடைந்தார் என்ற செய்தி இடியோசையாய் தமிழர்களின் செவிகளில் விழுந்திருக்கிறது. எண்ணிக்கை பலம் குறைந்த, மிக மிக பின்தங்கிய சமூகத்திலிருந்து உருவாகி, தமிழக அரசியலை புரட்டிப் போட்ட அவரது ஆளுமை அனைவருக்கும் ஒர் அரசியல் அரிச்சுவடியாகும். இதழியல், இலக்கியம், கவிதை, கலை, பண்பாடு, அரசியல், எழுத்து, திரையுலகம், நிர்வாகவியல் என அவர் பல்துறை வித்தகராகவும்; அவற்றில் புதுமையை புகுத்திய முற்போக்கராகவும் 80 ஆண்டு காலம் வலம் வந்திருக்கிறார். அவரது எழுத்து தமிழர்களை எழுச்சி பெற செய்தது, அவரது பேச்சு அவர்களை சிந்திக்க செய்தது. அவரது திரைப்பட வசனங்கள் தமிழ் சமூகத்தை வீறு கொள்ள செய்தது. அரசியலை தாண்டியும் அவரது தமிழ் அனைவரையும் ஈர்த்தது. அவரோடு அரசியலில் ஓடத் தொடங்கிய பலர் ஓட்டத்தை பாதியிலேயே நிறுத்திக் கொண்டனர். பலர் ஓட முடியாமல் ஓடி விட்டனர். பலர் ஓடிக் கொண்டே திணறினர். ஆனால்
பரங்கிப்பேட்டை நினைவு களஞ்சியம் நூல் வெளியீட்டு விழா..! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரை..!!
கடலூர்.ஆக.06., கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மக்களின் வாழ்வியல் கலாச்சாரத்தை கூறும் ஜானாப்.சி. ஜமால் மரைக்காயர் அவர்கள் எழுதிய #பரங்கிப்பேட்ட_நினைவு_களஞ்சியம் என்ற நூல் வெளியீட்டு விழா 05.08.18 அன்று நடைப் பெற்றது. #TMJK வின் இணைப் பொதுச் செயலாளர் மெஹ்ராஜ் பேசும் போது பரங்கிப்பேட்டை மக்களின் பாரம்பர்ய சொல்லாட்சி குறித்தும், உணவு பழக்க வழக்கங்கள் குறித்தும் பேசினார். #காங்கிரஸ் மாநில பேச்சாளர் கிளியனூர் ரத்தினசாமி பேசும் போது பரங்கிப்பேட்டையின் துறைமுகம் குறித்தும், மன்னர் ஒளரங்கசீப் மாயவரம் ஆதீன மடத்துக்கு 300 ஏக்கரை தானமாக வழங்கியது குறித்தும் பேசினார். பிறகு பேசிய சிதம்பரம் #DSP பாண்டியன் அவர்கள் பரங்கிப்பேட்டை ஜமாத்தினர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வராமலேயே பிரச்சனைகளை முடித்துக் கொள்பவர்கள் என பாராட்டினார். மேலும் பொன்னியின் செல்வன் நாவலில் இப்பகுதியும் வருவதாக கூறினார். ஆங்கிலெயர் காலத்தில் இங்கு தயாரிக்கப்பட்ட #இரும்பு_தளவாடங்கள் எக்மோர் ரயில்வே நிலையத்தை அலங்கரிப்பதாக சிலாகித்தார். #மஜக பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது பேசும்போது, நூலில் கூறப்பட்டுள்ள விஷயங்களை சுட்டிக்காட்டி , தமது இளம் வயது ஊர் அனுபவங்களையும் எடுத்துக் கூறி இன்றைய தலைமுறையின் நிலை குறித்தும் பேசினார். காங்ரஸ் சேவா தள தலைவர் சரவணகுமார் பரங்கிப்பேட்டையின்