பரங்கிப்பேட்டை நினைவு களஞ்சியம் நூல் வெளியீட்டு விழா..! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரை..!!

கடலூர்.ஆக.06., கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மக்களின் வாழ்வியல் கலாச்சாரத்தை கூறும் ஜானாப்.சி. ஜமால் மரைக்காயர் அவர்கள் எழுதிய #பரங்கிப்பேட்ட_நினைவு_களஞ்சியம் என்ற நூல் வெளியீட்டு விழா 05.08.18 அன்று நடைப் பெற்றது.

#TMJK வின் இணைப் பொதுச் செயலாளர் மெஹ்ராஜ் பேசும் போது பரங்கிப்பேட்டை மக்களின் பாரம்பர்ய சொல்லாட்சி குறித்தும், உணவு பழக்க வழக்கங்கள் குறித்தும் பேசினார்.

#காங்கிரஸ் மாநில பேச்சாளர் கிளியனூர் ரத்தினசாமி பேசும் போது பரங்கிப்பேட்டையின் துறைமுகம் குறித்தும், மன்னர் ஒளரங்கசீப் மாயவரம் ஆதீன மடத்துக்கு 300 ஏக்கரை தானமாக வழங்கியது குறித்தும் பேசினார்.

பிறகு பேசிய சிதம்பரம் #DSP பாண்டியன் அவர்கள் பரங்கிப்பேட்டை ஜமாத்தினர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வராமலேயே பிரச்சனைகளை முடித்துக் கொள்பவர்கள் என பாராட்டினார். மேலும் பொன்னியின் செல்வன் நாவலில் இப்பகுதியும் வருவதாக கூறினார். ஆங்கிலெயர் காலத்தில் இங்கு தயாரிக்கப்பட்ட #இரும்பு_தளவாடங்கள் எக்மோர் ரயில்வே நிலையத்தை அலங்கரிப்பதாக சிலாகித்தார்.

#மஜக பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது பேசும்போது, நூலில் கூறப்பட்டுள்ள விஷயங்களை சுட்டிக்காட்டி , தமது இளம் வயது ஊர் அனுபவங்களையும் எடுத்துக் கூறி இன்றைய தலைமுறையின் நிலை குறித்தும் பேசினார்.

காங்ரஸ் சேவா தள தலைவர் சரவணகுமார் பரங்கிப்பேட்டையின் தொன்மையான கலாச்சாரம் குறித்து வியந்து பேசினார்.

நூலை வெளியிட்டு மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA பேசியதாவது ..

#பரங்கிப்பேட்டை என்பது வரலாற்று சிறப்புமிக்க ஊராகும். உக்காஸ் (ரலி) அவர்களின் அடக்கஸ்த்தலம் இங்கு இருப்பது அதற்கு ஒரு எடுத்துக் காட்டாகும். எகிப்தின் கெய்ரோ பகுதியிலிருந்து ஒரு கூட்டம் காயல்பட்டினத்தில் குடியேறி, கீழக்கரை, அதிராம்பட்டினம், நாகூர் என பரவியது. அது போல பரங்கிப்பேட்டையிலும் குடியேறினார்கள். அதனால் தான் இங்கு காயல் தெரு உள்ளது.

பிறகு இன்றைய தெலுங்கானா பகுதியை சேர்ந்தவர்களும் இங்கு குடியேறினார்கள்.

அரபுகள் #முகமது_பந்தர் என பெயரிட்டார்கள். போர்ச்சுகீசியர்கள் #போர்டோநோவா என பெயரிட்டர்கள். ஆங்கிலேயர்கள் பரங்கிப்பேட்டை என்றார்கள். பரங்கியர் என்றால் அந்நியர் என்று அர்த்தம். பரங்கிப்பேட்டையின் பழைய பெயர் முத்துக்கிருஷ்னன்பேட்டை என்று பதிவாகி இருக்கிறது.

ஒளரங்கசிப் காலத்தில் மட்டும் தான் இந்தியா சர்வதேச வணிகத்தில் 27% ஆதிக்கத்தை செலுத்தியது. இன்று வரை வேறு எந்த அரசுகளும் அதை சாதிக்கவில்லை. அப்போது பரங்கிப்பேட்டை இந்தியாவின் 3 முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக திகழ்ந்தது. பரங்கிப்பேட்டை பன்னாட்டு வணிக நகராக திகழ்ந்ததால், ஒளரங்கசீப் இங்கு ஒரு வர்த்தக மையத்தை நிறுவினார். அவரது கவர்னர் தான் இங்குள்ள மீரா பள்ளியை கட்டிக் கொடுத்தார்.

இதே மண்ணில் தான் #மாவீரன்_ஹைதர்_அலி ஆங்கிலேயர்கள் எதிர்த்து வீரம் செறிந்த விடுதலை போரை நடத்தினார். அதில் உயிர் தியாகம் செய்தவர்களின் உடல்கள் இங்குள்ள #கிதர்_பள்ளி-யில் தான் அடக்கம் செய்யப்பபட்டன.

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இங்கு இரும்பு தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இங்கு உருவாக்கப்பட்ட இரும்பில் லண்டனில் ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டது. அதில் #Made_in_Portonovo என இருக்கிறது.

முன்பு மெக்காவுக்கு #ஹஜ்_பயணிகள் இங்குள்ள துறைமுகம் வழியாகவே புறப்பட்டார்கள்.

சிங்கப்பூர், மலேஷியா, இந்தோனேஷியாவுக்கு சென்ற இவ்வூர் மக்கள் சிறந்த வணிகர்களாக திகழ்ந்தனர். சுரபாயா தீவில் இப்போதும் வாழ்கிறார்கள். இன்று சிங்கப்பூரில் மிகப் பெரிய தொழில் சாம்ரஜ்யத்தை இவ்வூரை சேர்ந்த ஜலீல் பாய் தான் நடத்தி வருகிறார்.

பரங்கிப்பேட்டை மக்கள் தங்களுக்குள் சந்திக்கும் போது தங்கள் பாரம்பர்ய சொல்லாடல்களில் பேசிக் கொள்வது ஒரு சிறப்பாகும்.

இங்குள்ள பெண்கள் அணியும் வெள்ளை துப்பட்டி கலாச்சாரம் நாகூர், நாகை, தோப்புத்துறை, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் வரை தொடர்கிறது.

என்னோடு புதுக்கல்லூரியில் நிறைய பரங்கிப்பேட்டை நண்பர்கள் படித்தனர். அவர்கள் பரங்கிப்பேட்டை அல்வாவையும், இஞ்சிக் கொத்து பனியாரத்தையும் கொண்டு வந்து தருவார்கள். நாங்கள் நான குத்தான் பனியாரத்தை கொடுபபோம்.

எனக்கு சிங்கப்பூரில் கலிமா ஹஸன் தான் முதல் பரங்கிப்பேட்டை நன்பராக சேர்ந்தார்.

பிறகு திருக்குர்ஆன் உள்ளடக்கம் நூல் எழுதிய #அப்துல்_காதர்_மதனி, #அல்_ஹக்_பத்திரிக்கை ஆசிரியர் நிஜாம் என அறிமுகங்கள் தொடர்ந்தது.

சுனாமியின் போது #பரங்கிப்பேட்டை_ஐக்கிய_ஜமாத் செய்த சேவைகளை நாடே பாராட்டியது.

அப்படி பல சிறப்புகளை பரங்கிப்பேட்டை பெற்றிருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் அப்துல் காதர் மதனீ, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் யூனுஸ், ஐக்கிய ஜமாத் தலைவர் S.O.சையது ஆரிப் உள்ளிட்ட பிரமுகர்களும் பங்கேற்றனர். சிதம்பரம் சாதிக் அவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியை விழா ஏற்பாட்டாளர்கள் கடலூர் யாசின் மற்றும் யாசர் அரஃபாத் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_பரங்கிப்பேட்டை
#மஜக_கடலூர்_மாவட்டம்