திருவாரூர்.ஆக.12., அத்திக்கடைக்கு #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) கத்தார் மண்டல நிர்வாகி செய்யது பாருக் இல்ல திருமணத்திற்கு வருகை தந்த மஜக பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் திருவாரூரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது…
காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை காலம் தொடங்கவில்லை. ஆனால், கர்நாடகா மற்றும் கேரளாவில் கடும் மழை பெய்வதால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது
கடலில் தேவைக்கு மீறி ஆற்று நீர் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதை தடுக்கும் வகையில் காவிரியின் கிளை ஆறுகள் அனைத்திலும் தடுப்பணைகளை போர் கால அடிப்படையில் கட்ட தமிழக அரசு முன் வரவேண்டும்.
அது போல தஞ்சை, நாகை, திருவாருர், கடலூர் மாவட்டங்களில் இரண்டாம் கட்டமாக குடிமராமத்து பணிகளை விரிவுப்படுத்த வேண்டும். அனைத்து ஆறு, கால்வாய், ஏரி, குளங்களை மழை காலத்திற்கு முன்பே தூர் வாரினால் தான் , அது விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பயனுள்ளதாக இருக்கும்
நாகப்பட்டினம், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது இந்திய மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு நிறைவேற்றியுள்ள சட்டம் கடுமையானது. எனவே அச் சட்டத்தால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படாமல் மத்திய அரசு அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேட்டியளித்தார். பேட்டியின் போது மாநில செயலாளர் நாச்சிக்குளம்.தாஜுதீன், மாவட்ட செயலாளர் சீனி, பொருளாளர் ஷேக் அப்துல்லாஹ் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
முன்னதாக ஒன்றிய மஜக சார்பில் பொதக்குடி முதல் அத்திக்கடை வரை பொதுச் செயலாளருக்கு இரு சக்கர வாகன வரவேற்பு அளிக்கப்பட்டது.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருவாரூர்_மாவட்டம்
12.08.18