சென்னை. ஜூலை.04., இன்று காலை சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில், தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் #பசும்பொன்_முத்துராமலிங்க_தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இந்த வருடமே பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டுமென முக்குலத்தோர் புலிப்படை, பார்வார்டு பிளாக், நேதாஜி சுபாஷ் சேனா போன்ற அமைப்புகள் தன்னிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் #கண்ணியமிகு_காயிதே_மில்லத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மீண்டும் பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்றும், இது குறித்து தான் ஏற்கனவே சட்டமன்றத்தில் பேசியிருப்பதையும் நினைவூட்டினார். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம்.
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
தமிழக ஹஜ் பயணிகளுக்கு 6 கோடி மானியம்…! தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு மஜக பொதுச்செயலாளர் நன்றி…!!
சென்னை.ஜூலை.03., ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இது நாடு முழுக்க பரப்பரப்பாக விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு தமிழ்நாட்டிலிருந்து மெக்காவிற்கு செல்லும் ஹஜ் பயணிகள் 3828 பேருக்கு 6 கோடி ரூபாயை மானியமாக வழங்கும் என தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்கள் இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்து #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் பேசியதாவது... மாண்புமிகு முதல்வர் அவர்கள் இன்று 110 விதியின் கீழ் அறிவித்த எண்ணற்ற திட்டங்களை வரவேற்கிறேன்.. அதில் ஒன்றாக, தமிழக ஹஜ் பயணிகளுக்கு 6 கோடி மானியம் அறிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. மத்திய அரசு ஹஜ்ஜுக்கு மானியத்தை ரத்து செய்துள்ள நிலையில், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் கூட இப்படி அறிவிக்கவில்லை. தமிழகம் திராவிட இயக்க பூமி என்பதும், சவலைப் பிள்ளைகளான சிறுபான்மை மக்களுக்கு ஆதரவான பூமி என்பதும், அம்மா அவர்களின் அரசு சிறுபான்மை மக்களின் நலன் காக்கும் அரசு என்பதும் நிருப்பிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம்.
தமிழ் அறிஞர்கள் பெயரால் விருதுகள் வழங்கப்பட வேண்டும்…! சட்டப்பேரவையில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வேண்டுக்கோள்…!!
சென்னை.ஜூலை.03., கடந்த (29.06.2018) அன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள், அதன் ஒரு பகுதியாக பேசிய உரையின் சுருக்கம். (பகுதி - 08) பேரவை துணை தலைவர் அவர்களே.. அயோத்திதாசர் பண்டிதரின் பெயரில் அவரது இலட்சிய நோக்கோடு ஒருவருக்கு அவரது பெயரால் ஆண்டு தோறும் விருது வழங்கப்படும் என தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அறிவித்திருப்பதற்கு எனது பாராட்டுகளை அமைச்சர் அவர்களுக்கும் தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்தான் 'ஒரு பைசா தமிழன்' பத்திரிகையை தொடங்கி தமிழ் இதழியளின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் என்பதை இந்த அவையில் பதிவு செய்கிறேன். எனது தொகுதியான நாகப்பட்டினத்தில் தனித்தமிழ் இயக்க முன்னோடியான மறைமலை அடிகளார் பெயரில் ஆண்டுதோறும் தமிழறிஞர் ஒருவருக்கு விருது வழங்கப்படும் என அறிவித்தற்காகவும் எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பிறந்த நாளான ஜூலை-15 அன்று அவருக்குரிய மரியாதை செய்யப்படும் என அறிவித்தற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தனித்தமிழ் நூற்றாண்டு விழா கொண்டாடபடாமலேயே முடிந்திருக்கிறது. இதை சிறப்பிக்கும் வகையில் அவர் பிறந்த நாகப்பட்டினத்தில் தனித்தமிழ் ஆய்வுக்கூடம் ஒன்றை நிறுவவேண்டும் என்றும் நாகப்பட்டினத்தில் உள்ள "பப்ளிக் ஆபீஸ் ரோடை"
வக்பு வாரியத்திற்கு தமிழக அரசு பத்து கோடி ஒதுக்க வேண்டும்..! இந்தியாவிற்கே முன் மாதிரியாக பெண்களுக்கான தனி பொறியியல் கல்லூரியை உருவாக்க வேண்டும்..!! சட்டசபையில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை..!
சென்னை.ஜூலை.02., கடந்த (29.06.2018) அன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள், அதன் ஒரு பகுதியாக பேசிய உரையின் சுருக்கம். (பகுதி - 07) பேரவை தலைவர் அவர்களே... எனது நாகப்பட்டினம் தொகுதியில் நாகை - நாகூருக்கு அருகில் எல்லா சமூக மாணவிகளும் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு வக்பு வாரியத்தால் "அன்னை ஆயிஷா பெயரில் மகளிர் கலை - அறிவியல் கல்லூரி ஒன்றை தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு அன்பான வேண்டுகோளை விடுக்கின்றேன். மேலும், சென்னை அண்ணா சாலையில் உள்ள மதரஸா - இ - ஆசம் பள்ளிக்கூடம், ராயப்பேட்டை ஹேபோர்டு மகளிர் அரசு பள்ளிக்கூடம், திருவல்லிக்கேணி தயார் சாஹிப் அரசு முஸ்லிம் பள்ளிக்கூடம் ஆகிய நிறுவனங்களையும், அதன் சொத்துக்களையும் முஸ்லிம் சமுதாயம் உருவாக்கி அதை ஆங்கிலேயர் காலத்தில் அரசுக்கு ஒப்படைத்தது. இன்று அங்கே பல நிர்வாக குழப்பங்கள் நடக்கிறது. இந்த மூன்றையும் தமிழக அரசு இவற்றை தமிழ்நாடு வக்பு வாரியத்திடம் ஒப்படைத்து, அதன் கீழ் நிர்வாகக் குழுவை அமைத்து வழி நடத்த வேண்டும் என பரிந்துரைக்கிறேன். அண்ணா சாலையில் உள்ள மதரஸா - இ - ஆசம்
கர்நாடகா மீது உச்சநீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..! மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் புதுக்கோட்டையில் பேட்டி..!!
புதுகை. ஜூலை.02., புதுக்கோட்டை மேற்கு மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாவட்ட செயலாளர் துரை அவர்களின் தாயார் மரணமடந்ததையொட்டி மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் அவரது இல்லத்திற்க்கு சென்று ஆறுதல் கூறினார். பிறகு, புதுக்கோட்டையின் பிரபல சமூக சேவகர் கரீம் ஹாஜியார் இல்லத்திற்கு சென்று அவரையும் உடல் நலம் விசாரித்தார். பிறகு, நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், கர்நாடகாவில் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தின் முடிவை கண்டித்தார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவுகளுக்கு எதிராக கர்நாடக அரசு செயல்படுமாயின் அதன் மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பஜக தலைவர் தமிழிசை கூறியிருக்கிறார் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்தவர், தமிழிசை சொல்கிறார் என்பதற்காக இக்கருத்தை நிராகரிக்க கூடாது. அதனை வரவேற்கிறோம். அதுபோல் இந்தியா முழுக்க அதானியும், அம்பானியும் தான் இத்துறையில் கொழிக்கிறார்கள். எனவே, இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றார். பேட்டியின் போது மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன், மாநில துணைச் செயலாளர் தோப்புதுறை ஷேக் அப்துல்லா, மாநில விவசாயிகள் அணி செயலாளர்