சென்னை.ஜூலை.03., ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இது நாடு முழுக்க பரப்பரப்பாக விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு தமிழ்நாட்டிலிருந்து மெக்காவிற்கு செல்லும் ஹஜ் பயணிகள் 3828 பேருக்கு 6 கோடி ரூபாயை மானியமாக வழங்கும் என தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்கள் இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.
இதற்கு நன்றி தெரிவித்து #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் பேசியதாவது…
மாண்புமிகு முதல்வர் அவர்கள் இன்று 110 விதியின் கீழ் அறிவித்த எண்ணற்ற திட்டங்களை வரவேற்கிறேன்..
அதில் ஒன்றாக, தமிழக ஹஜ் பயணிகளுக்கு 6 கோடி மானியம் அறிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.
மத்திய அரசு ஹஜ்ஜுக்கு மானியத்தை ரத்து செய்துள்ள நிலையில், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் கூட இப்படி அறிவிக்கவில்லை. தமிழகம் திராவிட இயக்க பூமி என்பதும், சவலைப் பிள்ளைகளான சிறுபான்மை மக்களுக்கு ஆதரவான பூமி என்பதும், அம்மா அவர்களின் அரசு சிறுபான்மை மக்களின் நலன் காக்கும் அரசு என்பதும் நிருப்பிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சட்டப்பேரவை_வளாகம்.