தஞ்சை திருவையாறு ஒன்றியத்தில் மஜக எழுச்சி!கண்டியூரில் புதிய கிளை!

ஜூலை.10,

தஞ்சை மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட திருவையாறு ஒன்றியம், திருப்பந்துருத்தியில் மஜக நிர்வாகம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

திருப்பந்துருத்தி மஜகவினரின் செயற்பாடுகளை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பலர் திருவையாறு ஒன்றிய செயலாளர் சேட்டாம்பி என்கிற S. ஹபீப்ரஹ்மான் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர்.

மேலும், அருகில் உள்ள கண்டியூரிலும் தன்னெழுச்சியாக இணைந்தவர்களை கொண்டு புதிய கிளை நிர்வாகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுகளில் திருப்பந்துருத்தி நகரச் செயலாளர் முகமது காலித், பொருளாளர் அசார், துணைச் செயலாளர் பாரிஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த வாரத்தில் மட்டும் தமிழகமெங்கும் ஐந்திற்கு மேற்பட்ட புதிய கிளைகளும், சுமார் 250 க்கும் அதிகமானோர் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING #திருவையாறு_ஒன்றியம்
#தஞ்சை_மாநகர்_மாவட்டம்.
09/07/2020

Top